»   »  ஊரைக் கலக்கும் ராஜா பாட்டு!

ஊரைக் கலக்கும் ராஜா பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கற்றது தமிழ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இசைஞானி இளையராஜா பாடியுள்ள பாடல் பெரும் ஹிட் ஆகியுள்ளது.

Click here for more images

ராம் படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அசத்தின. அதன் பின்னர் தற்போது அதே ஜீவாவுக்காக, கற்றது தமிழ் படத்தில் கலக்கலாக இசையமைத்துள்ளார் யுவன்.

பாடல்கள் அனைத்தும் வெளியான சூட்டிலேயே ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பறவையாய் என்னை ஆக்கி விட்டாய் என்ற பாடல் இதயத்தை வருடுவதாக உள்ளது.

மொத்தம் உள்ள 6 பாடல்களுமே கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஆடியோ ரிலீஸ் லேட் ஆனாலும், பாடல்கள் அனைத்தும் படு டேஸ்ட்டாக வந்துள்ளன.

இசைப் பிரியர்களின் இதயங்களை கற்றது தமிழ் பாடல்கள் வருடும் என்பதில் சந்தேகம் இல்லை. படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil