»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருவாசகத்திற்கு சிம்பொனி இசையமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

திருச்சி முத்தமிழ்க் கலை மன்றம் சார்பில் இசைஞானி இளையராஜாவின் இலக்கியப் படைப்புகள் குறித்து கருத்தரங்குநடைபெற்றது.

சங்கீதக் கனவுகள், வழித்துணை நூல்களை பேராசிரியர் செகந்நாதன், ஞானகங்கா நூலை முனைவர் கலைச்செல்வி, துளிக்கடல்,இளையராஜாவின் சிந்தனைகள் நூல்களை பேராசிரியர் அறிவொளி,

பால்நிலா பாதை, வெட்ட வெளிதனில் கொட்டிக்கிடக்குது நூல்களை பேராசிரியர் சோ. சத்தியசீலன், வெண்பா நன்மாலை நூலைபேராசிரியர் பா. நமசிவாயமும் ஆகியோர் ஆய்வுரை செய்தனர்.

பின்னர் இளையராஜா ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

திருவாசகத்தை தமிழ் தெரியாதவர்கள்கூட கேட்டுப் பிரமித்துள்ளனர். என்னைப்போல் சாதாரண மனிதனையும் திருவாசகம்சென்றடைய வேண்டும். திருவாசகத்தை இசையுடன் கேட்டால் உடல் மற்றும் எண்ணத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும்.

எனவேதான் அதற்கு இசையமைக்க முடிவு செய்தேன். பொல்லா வினையே என்ற பாடலுடன் இந்த இசைத் தொகுதிதொடங்குகிறது. ஒவ்வோர் அடிக்கும் இசையமைக்க 90 வரிகள் நோட்ஸ் எழுதினேன். வார்த்தைகள் உணர்த்த முடியாததை இசைஉணர்த்தும்.

இதுவரையிலும் நான் எந்த சாதனையையும் செய்யவில்லை. திரைப்படத்தில் வரையறைகளைத் தாண்டி புதிதாக செய்ய முடியாது.

இசையைத் தவிர்த்து எனக்கு ஒன்றுமே தெரியாது. அது இல்லாவிட்டால் நான் கஷ்டப்பட்டிருப்பேன்.

தமிழன் என்பதற்காக என்னை பாராட்டுவதாகக் கூறினார்கள். ஆனால் மொழிக்கு அப்பாற்பட்டது இசை. தமிழ் என்பதுமொழியில்லை, அது ஒரு பண்பு.

வாழ்க்கை என்பது மிகவும் இயல்பானது. அதில் வெற்றி, தோல்வி என்று எதுவும் கிடையாது. வாழ்வில் நடக்கும் சிறு, சிறுசம்பவங்களின் முடிவுகலை வெற்றி, தோல்வி என நினைக்க முடியுமா?

திருவாசகத்திற்கு இசையமைப்பதற்காகத்தான் நான் பிறந்தேன் என்று இளையராஜா கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil