»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கங்கை அமரன் இயக்கத்தில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார் இசைஞானி இளையராஜா.

தனது பாவலர் கிரியேசன்ஸ் மூலமாக கீதாஞ்சலி, கரகாட்டக்காரன், சிங்காரவேலன் என அவ்வப்போதுபடங்களைத் தயாரித்து வந்த ராஜா, சமீப காலமாக தயாரிப்புப் பணியில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.

ரஹ்மான் அலைக்குப் பின் நிதி நிலைமையிலிலும் கொஞ்சம் சறுக்கல் இருந்ததால், புதிய படத் தயாரிப்பில்பணத்தைப் போடவில்லை ராஜா.

இந் நிலையில்தான், கரகாட்டக்காரனுக்குப் பின் படமேதும் இயக்காத கங்கை அமரன் மீண்டும் டைரக்ட் செய்யஆசைப்படுவதால், அவருக்காக படத் தயாரிப்பில் மீண்டும் இறங்குகிறார். முற்றிலும் புதிய முகங்கள் நடிக்கும்இந்தப் படத்துக்கான கதை விவாதம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

மீடியம் பட்ஜெட்டில் உருவாகிறது இந்தப் படம்.

இதற்கிடையே இளையராஜாவை இந்திக்குக் கொண்டும் செல்லும் முயற்சியும் நடக்கிறது. பாலிவுட்டின் தடாலடிஇயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அடுத்த படத்துக்கு இளையராஜாவை புக் செய்யும் முடிவில் இருக்கிறார்.

வாஸ்து சாஸ்த்ரா என்ற பெயரில் தயாராகும் இந்திப் படத்துக்கு இசையமைக்க முதலில் ஏ.ஆர்.ரஹ்மானைத் தான்நாடினார். கை நிறைய அசைன்மெண்ட் இருக்கிறது என்று கூறி, ரஹ்மான் மறுத்துவிட, இப்போது இளையராஜாபக்கம் திரும்பியிருக்கிறார் வர்மா. இந்தப் படத்தில் சக்ரவர்த்தி, சுஷ்மிதா சென் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரஹ்மானை இந்திப் படங்களுக்கு இசையமைக்க அழைத்துப் போனது ராம்கோபால் வர்மாதான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil