»   »  இனிமேல் கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்-ஷாருக்

இனிமேல் கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்-ஷாருக்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தீவிர கிரிக்கெட் ரசிகரான ஷாருக் கான், திடீரென நான் இனிமேல் என் வாழ்நாளில் கிரிக்கெட் போட்டி பார்க்கவே மாட்டேன் என்று வெறுப்புடன் கூறியுள்ளார்.

ஷாருக் கான் தீவிர கிரிக்கெட் ரசிகர். சமீப காலமாக இந்திய அணி எங்கு விளையாடினாலும் சென்று பார்த்து வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 ஓவர் இறுதிப் போட்டி, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மும்பையில் நடந்த 20-20 ஓவர் போட்டி மற்றும் சமீபத்தில் ஜெய்ப்பூரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் என அனைத்தையும் கண்டு களித்தார்.

அவர் பார்வையாளராக கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் டிவி கேமராக்கள் அவரை போட்டி போட்டுக் கொண்டு காட்டின. அவரும் அதற்கு ஏற்றார் போல் கைகளை காட்டி போஸ் கொடுத்தார்.

ஷாருக் கான் கிரிக்கெட் போட்டியை பார்க்க வருவது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரான ரமீஸ் ராஜா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக செயலாளர் ரத்னாகர் ஷெட்டியிடம் பேட்டி எடுத்தார்.

அதற்கு அவர், ஷாருக் கான் நேரடியாக வந்து கிரிக்கெட் பார்ப்பது மூலம் தன்னையும், தான் நடித்துள்ள ஓம் சாந்தி ஓம் படத்தையும் பிரபலப்படுத்த முயற்சிக்கிறார் என்று கூறினார்.

ஷெட்டியின் இந்த விமர்சனம் ஷாருக் கானை கடும் ஆத்திரமடைய செய்து விட்டது.

இந்த விமர்சனம் குறித்து ஷாருக் கூறுகையில்,

எனக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் உண்டு. அதிலும் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்க நான் சென்றேன்.

எனது படத்தை கிரிக்கெட் பார்த்துதான் மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கடவுள் எனக்கு எல்லா செல்வங்களையும் கொடுத்துள்ளார். நான் செல்வாக்கிற்காக அலைய வேண்டியதில்லை.

நான் கிரிக்கெட் பார்ப்பதால் இப்படியெல்லாம் பிரச்சனைகள் வருமென்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.

இனி எனது வாழ்நாளில் இனிமேல் கிரிக்கெட் பார்க்கவே போக மாட்டேன். எனது குழந்தைகள் டெண்டுல்கர், டோணி, கங்குலியின் தீவிர ரசிகர்கள். அவர்கள் கூட இனி கிரிக்கெட் பார்க்கப் போவதை நான் விரும்பவில்லை என்றார் வெறுத்துப் போன ஷாருக் கான்.

Read more about: shahrukh khan, cricket
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil