»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இந்து மிகவும் நொந்து போயிருக்கிறார். பல படங்களில் ஹீரோயினின் அழகிய தோழியாக (சில படங்களின் ஹீரோயின்களை விடஅழகாகவே இருக்கிறார்), ஹீரோவின் தங்கையாக வந்து போய்க் கொண்டிருந்த நடிகை இந்துவுக்கு மாயி படத்தில் நல்ல ரோல் என்றுசொல்லி அழைத்தார்களாம். அவரும் ஆசை ஆசையாய் போனார்.

பல காட்சிகளை எடுத்தார்கள். மிக முக்கியரோல் ஒன்றில் இந்து நடித்தாராம்.

படம் வெளியே வந்த பிறகு பார்த்தால் அவருக்கு பெரும் அதிர்ச்சி. படத்தில் தன்னைத் தேடித் தேடிப் பார்த்தார். எங்கோ ஒரு ஓரத்தில்மணப்பெண் கோலத்தில் நிற்பது மாதிரி ஒரே சீன். ஒரு அழுகை. அவ்வளவு தான். மற்றபடி அவர் நடித்த காட்சிகள் எதுவுமே திரையில்இல்லை. வெறுத்துப் போய் நிற்கிறார்.

இப்போது அவருக்கு உள்ள ஒரே ஆறுதல் டி.வி. சீரியல்களில் தான். இதில் நல்ல பெயரும் எடுத்து வருகிறார்.

தினக்கு தினக்கு தினா...

தினா. மணிரத்னம் தனது அடுத்தபடத்திற்கு அறிகப்படுத்தும் இசையமைப்பாளரின் பெயர். ஏகப்பட்ட டி.வி தொடர்களுக்குஇசையமைத்திருக்கிறார். ராதிகா நடித்து தமிழகத்தை கலக்கிக்கொண்டிருக்கும் சித்தி தொடரில் இசை, தினாவின் கைவண்ணம் தான்.

இயக்குனர் ராஜீவ் மேனனின் விளம்பரப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பைப்பெற்று, மனோ பாலாவின் பாலைவனப்புயல் தொடர்மூலம் அறிமுகமானவர். எல்லா இசையமைப்பாளருடனும் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு. கலக்குங்க சார்.

மீண்டும் சினிமாவுக்கு...

விசு சமீபகாலமாக அரட்டை அரங்கத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த விசு. மறுபடியும் சினிமா பக்கம் வருகிறார். இயக்குனராக மிகநீண்ட இடைவெளிக்குப்பிறகு திரையுலகில் முத்திரை பதிக்க இருக்கிறாராம். எஸ்.வி.சேகர்தான் ஹீரோ. கவிதாலயா பேனரில் படம்ஷூட்டிங் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கபட இருக்கிறது.

Read more about: actors, actress, directo, indu, visu, ytamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil