twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்மதிப்பார்களா டாப் ஹீரோக்கள்..? தமிழ் சினிமாவில் சதவிகித அடிப்படையில் சம்பளம், சாத்தியமா..?

    By
    |

    சென்னை: சதவிகித அடிப்படையில் சம்பளம் கொடுத்து படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியும்.

    இதுதொடர்பாக, கடந்த 2 நாட்களுக்கு முன், ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார், திருப்பூர் சுப்பிரமணியம்.

    கொரோனா கால புதுமை என்று அந்த ஆடியோ பதிவு பரபரப்பானது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

    ஆடை படத்துல அமலா பால் 'அப்படி' நடிச்ச சீன் இதுதான்.. அதை மட்டும் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!ஆடை படத்துல அமலா பால் 'அப்படி' நடிச்ச சீன் இதுதான்.. அதை மட்டும் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!

    சதவிகித அடிப்படை

    சதவிகித அடிப்படை

    திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டிருந்த அந்த ஆடியோவில், 'கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குனர்கள் சதவிகித அடிப்படையில் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பற்றி தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனும் நானும் பேசினோம். அதன் அடிப்படையில் ஒரு படத்தைத் தயாரிப்பது பற்றி ஆர்.பி.சவுத்ரியிடம் சொன்னேன். நல்ல ஐடியாதான், செய்யலாம் என்றார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்க ஒப்புக்கொண்டார்.

    நடிகர் சத்யராஜ்

    நடிகர் சத்யராஜ்

    பிறகு, தாடி வெங்கட் சொன்ன கதைப் பிடித்திருந்தது. அதில் அனைத்து நடிகர்களுக்கும் கேரக்டர் இருக்கிறது. இந்த கதையை கே.எஸ்.ரவிகுமாரும் ஆர்.பி.சவுத்ரியும் கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். முக்கியமான கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்க பேசினோம். சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்க ஒப்புக்கொண்டார். கவுரவ வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதியும் பார்த்திபனும் சரி என்றார்கள்.

    பங்குதாரர்கள்

    பங்குதாரர்கள்

    பட்ஜெட் ரூ.2 கோடி. இதை 200 பங்குகளாகப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். சினிமாகாரர்கள் இந்தப் பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். ஒருவருக்கு அதிகப்பட்சமாக 10 பங்குகள் வழங்கப்படும்' என்று கூறியிருந்தார். இதையடுத்து பல தயாரிப்பாளர்கள் , பங்குதாரர்களாக சேர்வதாகக் கூறியிருந்தனர்.

    கே.எஸ்.ரவிக்குமார்

    கே.எஸ்.ரவிக்குமார்

    இதையடுத்து கோலிவுட்டில் கடந்த 2 நாட்களாக பரபரப்பாகி வருகிறது இந்தச் செய்தி. இதுபற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டோம். அவர் கூறும்போது, 'இப்போதுதான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வேறு எதுவும் முடிவாகவில்லை. இந்த படத்தின் ரிலீஸை அடுத்தே, சதவிகித அடிப்படையிலான சம்பளம் தமிழ் சினிமாவில் தொடருமா என்பது தெரிய வரும்' என்றார்.

    கோடிகளில் ஷேர்

    கோடிகளில் ஷேர்

    பெயர் சொல்ல விரும்பாத பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, 'இந்தப் படத்தை 2 கோடியில் எடுக்கிறார்கள். சேட்டிலைட் உட்பட 10 கோடிக்கு வியாபாரம் பண்ண முடியும். சதவிகித அடிப்படையில் என்றால் சத்யராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோருக்கு கோடிகளில் ஷேர் கிடைக்கும். கண்டிப்பாக லாபமான படமாகவே இருக்கும். ஆனால், இது தொடருமா என்பது சந்தேகம்தான்' என்கிறார்.

    Recommended Video

    Bigg Boss Mahat reduced his salary | Simbhu Friends on Board, Mahat, Harrish Kalyan
    பெரிய ஹீரோக்கள்

    பெரிய ஹீரோக்கள்

    'சினிமா ஹீரோக்களை நம்பிதான் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் பெரிய ஹீரோக்களை தேடிச் செல்கிறார்கள். அவர்கள் சதவிகித அடிப்படை சம்பளத்துக்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார்கள். இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்கள் மட்டுமே சம்மதிக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்துவிட்டு இப்போது வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகர்களும் இதில் பங்கு பெறுவார்கள்' என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர்.

    English summary
    Is it possible to make a film with revenue-sharing basis in kollywood?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X