»   »  'மோடியை விடவா குஷ்பு மோசம்?'-சத்யராஜ்

'மோடியை விடவா குஷ்பு மோசம்?'-சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil
Kushboo with Satyaraj
மனிதக் கழிவை மனிதனே அள்ள வேண்டும் என்று பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக யாரும் கொடி பிடிக்கவில்லை. ஆனால் குஷ்பு சாமியை அவமதித்து விட்டார் என்று எதிர்ப்பு தெரிவிக்க வந்து விட்டனர் என்று நடிகர் சத்யராஜ், குஷ்புவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தேவயானியின் தம்பி நகுலன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுனேனா நடிக்க உருவாகியிருக்கும் காதலில் விழுந்தேன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் சத்யராஜ் கலந்து கொண்டார். மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆடியோ கேசட்டை வெளியிட அதை சத்யராஜ் பெற்றுக் கொகண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில் குஷ்புவை விமர்சிப்பவர்களை ஒரு பிடி பிடித்தார்.

சத்யராஜ் பேசுகையில், வல்லமை தாராயோ விழாவுக்கு நான் நல்லவேளையாகப் போகவில்லை. எனது கை விரலில் பெரியார் மோதிரத்தை அணிந்துள்ளேன். நான் வெறும் காலோடு அங்கு போயிருந்தாலும் நிச்சயம் பிரச்சினையாக்கி இருப்பார்கள்.

வல்லமை தாராயோ விழாவில் நடந்த சிறிய விஷயத்தைத் தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர்.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி, மனிதக் கழிவை மனிதனே அள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசுகிறார். மலம் அள்ளினால் யோக நிலை பெறலாம் என்கிறார். அவரைக் கேட்க யாரும் இல்லை. ஆனால் குஷ்பு அவமதித்து விட்டார் என்று கூறி அவரை தேவையில்லாமல் விமர்சிக்கின்றனர் என்று விளாசினார் சத்யராஜ்.

இயக்குநர் சீமான் பேசுகையில், தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்களைப் பிடித்தார். அவர் பேசுகையில், தமிழர்கள் தங்களது பெயருக்கு முன்னால் வரும் இனிஷியலை தமிழில்தான் போட வேண்டும். தம்பி படத்தின்போது மாதவனின் இனிஷியலை ரா. என்று மாற்றினேன். ஆனால் ஆர் என்றுதான் போட்டு வருகிறேன். மாற்றினால் படம் ஓடாது என்றார். ஆனால் படம் ஓடியது.

உலகிலேயே தங்களது பெயரில் இரு மொழிகளைப் பயன்படுத்தும் கேவலமான இனம் தமிழ் இனம்தான் என்றார் சீமான்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil