»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய். விஜய்க்கு ஜோடியாக மாதேஷ் இயக்கும் படத்தில்அவர் புக் செய்யப்பட்டுள்ளார்.

இருவர் மூலம் ஐஸ்வர்யா ராயை சினிமாவுக்கு அழைத்து வந்ததே தமிழ்த் திரையுலகம் தான். மணிரத்னத்தின் அந்ததிராவிட அரசியல் வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தைப் போட்டார் ஐஸ். படம் ஓடாவிட்டாலும்ஐஸ்வர்யா பேசப்பட்டார். அதன் பின்னர் இந்தியில் நடிக்க ஆரம்ப ஆரம்பித்து முன்னணிக்குச் சென்றார்.

இதையடுத்து தமிழ் உள்பட வேற்று மொழிப் படங்களில் எட்டிப் பார்க்கவில்லை. இடையே ஷங்கரின் ஜீன்ஸ்,ராஜிவ் மேனனின் கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்.. என பெரிய டைரக்டர்களின் படங்கள் மூலம் தமிழில்தலை காட்டினார். இதன் பிறகும் அவரைத் தேடி வாய்ப்புக்கள் போன போதும், இந்தியில் படு பிஸியானதால்தமிழில் தொடர்ந்து நடிக்க மறுத்து வந்தார்.

இப்போது இந்தியில் அவருக்கு இறங்கு முகம். ஐஸ்வர்யா நடித்து படம் வெற்றி பெற்று நீண்டகாலமாகிவிட்டது.இதையடுத்து மீண்டும் தமிழில் நடிக்க முன் வந்துள்ளார்.

பிரஷாந்தை வைத்து மல.. மல. மருதமலை புகழ் சாக்லேட் படத்தைத் தயாரித்த மாதேஷ், அடுத்து விஜய்யைவைத்து படம் எடுக்கிறார். அதில் ஜோடியாக ஐஸ்வர்யாவை புக் செய்துள்ளார்.

சமீபத்தில் அமீர்கான் நடிக்கும் த ரைசிங் என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா தேர்வுசெய்யப்பட்டிருந்தார். ஆனால், அதிலிருந்து அவரைக் கழற்றிவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அந்த டேட்ஸை தமிழுக்குத் ஒதுக்கித் தர முன் வந்தாராம் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவுக்கு சம்பளம்எவ்வளவு என்றால் இரண்டு விரல்களை உயர்த்துகிறார்கள். பெரிய ரெண்டாம்... அம்மாடியோவ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil