»   »  ரஜினியை இயக்கிக் கொண்டிருப்பவருக்கு இன்று பிறந்தநாள்: அவரே தான்...

ரஜினியை இயக்கிக் கொண்டிருப்பவருக்கு இன்று பிறந்தநாள்: அவரே தான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஷங்கர் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகராக ஆசைப்பட்டு கோடம்பாக்கம் வந்தவர் இயக்குனர் ஆகிவிட்டார்.

வெற்றி இயக்குனர்

வெற்றி இயக்குனர்

1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனர் ஆனார் ஷங்கர். அதில் இருந்து இன்று வரை தொடர் வெற்றிப் படங்களை அளித்து கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக இருந்து வருகிறார்.

லேசு இல்லீங்க

லேசு இல்லீங்க

ஒரு படத்தை இயக்கி வெற்றி பெறச் செய்வதே பெரும் விஷயமாக உள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் முன்பே கசிந்துவிடும் காலமாக உள்ளது. இந்நிலையில் இத்தனை ஆண்டுகளாக வெற்றி இயக்குனராக ஷங்கர் இருப்பது சாதாரண விஷயம் அல்ல.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஷங்கர் தான் இயக்கிய முதல்வன் படம் மூலம் தயாரிப்பாளரும் ஆனார். அதில் இருந்து அவர் காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், கல்லூரி உள்ளிட்ட சில தரமான படங்களை தயாரித்துள்ளார்.

2.0

2.0

ஷங்கர் தற்போது ரஜினிகாந்தை வைத்து எந்திரன் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷங்கர்.

English summary
Today is celebration for director Shankar as it is his Birthday. We wish you a very happy birthday and all the very best for your current project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil