»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் ஜக்குபாய் படம் தீபாவளிக்குப் பதிலாக பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினி பிரசாரத்துக்கு வருவாரா என்ற கேள்வியிலிருந்து மக்களைத் திசை திருப்ப கடந்த சில தினங்களுக்கு முன்புதுப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜக்குபாய் என்ற, ரஜினியைப் போலவே, புதிரான பெயருடன் படத்துக்குவிளம்பரம் தரப்பட்டது.

விளம்பரம் வெளியான தினத்தன்று ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியிடுவதாகத் திட்டம்இருந்தது. இந் நிலையில் தேர்தல் தினமான இன்று, பரபரப்பூட்டும் வகையில் மீண்டும் ஒரு விளம்பரம்தரப்பட்டுள்ளது.

இதில், ஜக்குபாய் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறைவா, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, பகைவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற வரியும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது.

என் நண்பர்கள் (கருணாநிதி-ப.சிதம்பரம்) வீட்டில் ராமதாஸ் தஞ்சம் புகுந்துவிட்டதால்தப்பிவிட்டார் என்று ரஜினி மனம் திறந்தபோது கூறியது குறிப்பிடத்தக்கது.

அதே போல இன்றைய விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள இன்னொரு வாசகம் A demon to thedemons (தமிழில் அரக்கனுக்கு அரக்கன் என்று அர்த்தம்).

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நடித்த ரஜினி இப்போது அரக்கனுக்கு அரக்கன் என்று தனதுபடத்துக்கு விளம்பரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது சோகமே.

இந் நிலையில் ஜக்குபாய் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

ரஜினியும் நானும் அடிக்கடி சந்திப்பது வழக்கம். கடந்த வருடமே அவர் புதிய படத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது என்னிடம் கதை ஏதேனும் உள்ளதா என்று கேட்டார். நான் ஒரு கதையை சொன்னேன்.மேலும் சில இயக்குனர்களிடமும் அவர் கதை கேட்டார்.

எதிரி படத்தை நான் இயக்கிக் கொண்டிருந்தபோது சமீபத்தில், ரஜினி என்னை அழைத்து, எனது அடுத்த படத்தைநீங்கள்தான் இயக்கப் போகிறீர்கள் என்று கூறினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

படத்தின் கதையை ரஜினியே கொடுத்தார். அது நான் சொன்ன கதை அல்ல. படையப்பா கதையும் ரஜினிகொடுத்ததுதான்.

ஜக்குபாய் என்று ரஜினி தான் பெயர் வைத்தார். அவர் சொன்ன கதைக்கு அதுதான் பொருத்தமான தலைப்பு.இப்போது கதை விவாதம் நடந்து வருகிறது. ரஜினியும் விவாதத்தில் கலந்து கொள்கிறார். கதை விறுவிறுப்பாகசெல்ல சில ஐடியாக்களை ரஜினி வழங்கி வருகிறார்.

திரைக்கதை முழு வடிவம் பெற்ற பின்னர் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறும். இந்தப்படத்தில் ரஜினியின் கேரக்டர் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்க்காத ரஜினியை இந்தப்படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள்.

ஜூலையில் தொடங்கி ஒரே கட்டமாக படபிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பெரும்பாலும் ரஜினி படத்தின் சூட்டிங்அதிகபட்சமாக 3 மாதங்கள் தான் படப்பிடிப்பு நடைபெறும். ஆனால் இந்தமுறை ஜூலையில் தொடங்கி பொங்கல் வரை ஏறக்குறைய 6 மாதங்கள் நடைபெறவுள்ளது.

ரஜினி மாஸ் ஹீரோ என்பதால், 6 மாதம் வரை படம் குறித்து எழுந்துள்ள எதிர்பார்ப்பை தக்க வைக்க முடியுமாஎன்ற கேள்வி எழுந்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினி வெளியிட்டுள்ள இந்த புதுப் பட அறிவிப்பு,எந்த வகையில் அவரது புகழை தக்க வைக்கும் என்பது, எவ்வளவு சீக்கிரமாக படத்தை முடிக்கிறார் என்பதைப்பொறுத்தே அமையும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil