»   »  தங்கச்சிய நாய் கட்ச்சிடுச்சுப்பா.. மறக்க முடியாத ஜனகராஜ்!

தங்கச்சிய நாய் கட்ச்சிடுச்சுப்பா.. மறக்க முடியாத ஜனகராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் ஜனகராஜின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் பேசிய சில வசனங்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

தனது மேனரிசம், தமிழ் உச்சரிப்பு, தனக்கே உரிய ஸ்டைலால் காமெடியில் கலக்கியவர் ஜனகராஜ். கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். மெட்ராஸ் பாஷையை அவ்வளவு அருமையாக பேசி நடிப்பார்.

என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சே, என்னமோ போடா மாதவா உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே இன்றும் பிரபலம்.

என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சே

அக்னி நட்சத்திரம் படத்தில் மனைவியை ஊருக்கு அனுப்பும்போது போகாத தங்கமணி என அழுது கண்ணீர் விட்டுவிட்டு மனைவி சென்றதும் என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சே என மகிழ்ச்சியில் ஜனகராஜ் குதித்ததை மறக்க முடியுமா?.

குட்மார்னிங் பிரதர் மவுன்டன்

அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் தனக்கு தெரிந்த அறைகுறை ஆங்கிலத்தை வைத்து காமெடி செய்வார். அண்ணாமலையை பிரதர் மவுடன் என்று அழைப்பார். மினிஸ்டர் ஃபைல்ஸ் கம்பிளைன்ட் என்றால் அமைச்சருக்கு மூல நோய் என்று கூறி சிரிக்க வைத்தார் ஜனகராஜ்.

எங்கேயோ போய்ட்டீங்க சார்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் அதிகாரியான ஜனகராஜ் கால் தடுக்கி கீழே விழுந்து சமாளிப்பார். அதை பார்த்த கான்ஸ்டபிள் சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் என்று பெருமை பொங்க கூறுவார்.

என்னமோ போடா மாதவா

அண்ணா நகர் முதல் தெரு படத்தில் மாதவனாக நடித்த ஜனகராஜ் தனது அழகை தானே புகழ்வார். அந்த படத்தில் அவர் கூறிய என்னமோ போடா மாதவா வசனம் மிகவும் பிரபலம்.

தங்கச்சிய நாய் கட்ச்சிடுச்சுப்பா

படிக்காதவன் படத்தில் ஜனகராஜ் குடிபோதையில் ரஜினியிடம் தங்கச்சிய நாய் கட்ச்சிடுச்சுப்பா என்று மீண்டும் மீண்டும் கூறி கடுப்பேற்றி நம்மை சிரிக்கை வைப்பார்.

முதலாளி என்சாய்

அக்னி நட்சத்திரம் படத்தில் தனது முதலாளியான வி.கே. ராமசாமிக்கு ப்ரொஜெக்டர் வைத்து ஆபாச படம் போட்டு காண்பித்து முதலாளி என்சாய் என்பார் ஜனகராஜ்.

பெரிய தங்கமலை ரகசியம்

பந்த் அன்று புதிய ஹோட்டல் திறந்து அன்று யாருமே சாப்பிட வராததால் வருத்தப்படுவார் ஜனகராஜ். அப்போது உசிலை மணி வந்து ஒரு சின்ன தொழில் ரகசியம் என்று கூற ஆமா பெரிய தங்கமலை ரகசியம் என்பார் ஜனகராஜ்.

English summary
Comedian Janagaraj who is known for his unique dialogue delivery and mannerisms is returning to big screen after a long break.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil