»   »  எஸ்.ஜானகிக்கு பொன்விழா!

எஸ்.ஜானகிக்கு பொன்விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொஞ்சும் குரலுக்குச் சொந்தக்காரரான எஸ்.ஜானகியின் பொன் விழாவையொட்டி அவருக்கு ஈரோட்டில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

1957ம் ஆண்டு பின்னணி பாட வந்தவர் எஸ்.ஜானகி. அவரது கொஞ்சும் குரலில் உருவான எண்ணற்ற பாடல்கள் இன்றும் கூட சாகாவரம் பெற்று ரசிகர்களை மயக்கி வருகின்றன.

ஜானகி பின்னணி பாட வந்து 50 வருடங்கள் ஆவதையொட்டி அவருக்கு ஈரோட்டில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. ஒய்.ஜீ மெலோடி மேக்கர்ஸ், ஆலந்தூப் நுண் கலைக் கழகம், அருண் கிரியேட்டர்ஸ் ஆகியோர் இணைந்து வருகிற ஜூலை 1ம் தேதி ஈரோடு பி.பி.பி பள்ளி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணிப் பாடகர்கள் பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், மலேசியா வாசுதேவன், ஏ.எல்.ராகவன், நடிகைகள் எம்.என்.ராஜம், மனோரமா, லட்சுமி, சினேகா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அன்று மாலை ஒய்.ஜீ மெலோடி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு மெல்லிசைக் கச்சேரி நடக்கவுள்ளது. அதில் ஜானகி பாடிய பாடல்கள் பாடப்படும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil