»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தில் பேர் மாறாட்டம் சூடு பிடித்திருக்கிறது.

சமுராயில் அனிதாவாக அறிமுகமானவர் சமீபத்தில் நதீஷா என்ற பெயர் மாற்றிக் கொண்டதோடு புதுமுகம் என்ற பெயரில் சுக்ரன் படத்தில்நடித்து வருகிறார்.

இதே போல எஸ்.எஸ்.சந்திரனின் மகன் ரோஹித்துக்கு ஜோடியாக ஒருமுறை சொல்லி விடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானஐனப்பிரியா தனது நாமகரணத்தை சுனிதா வர்மாவாக மாற்றிக் கொண்டு சத்யராஜுக்கு ஜோடியாக 6.2 என்ற படத்தில் ரீஎன்ட்ரிஆகிறார்.

ஜனப்பியாவின் சொந்தப் பெயரே சுனிதா வர்மாதான். மலையாளத்து சிட்டான சுனிதா தமிழுக்கு வரும் முன் தெலுங்கில் கொஞ்ச காலம்பொழப்பு நடத்தினார். அங்கு இரண்டாம் மட்ட கதாநாயகியாக கவர்ச்சி காட்டும் வேலையை செய்து வந்தார்.

பெரிய அளவில் முன்னுக்கு வர முடியாமல் போனதால் ஜனப்பிரியாவாக மாறி தமிழுக்கு வந்தார்.

முதல் படத்திலேயே அதிரடி கவர்ச்சி காட்டி பிரமிக்க வைத்தார். ஆனால், படம் பெரும் தோல்வி அடையவே ஜனப்பிரியாவை யாருக்குமேதெரியாமல் போய்விட்டது.

முதல் படமே ஊத்திக் கொண்டதால் நொந்து போன சுனிதா, தனது ஒரிஜினல் பெயருடன் 6.2 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம்தமிழ் ரசிகர்களை வளைக்காமல் விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன், படுகவர்ச்சியாக நடித்து வருகிறார்.

அது என்ன, படத்தின் பெயர் 6.2 என்கிறீர்களா?. அது சத்யராஜுன் உயரமாம். அவரை ஹீரோவாக்கியதோடு உயரத்தையே தலைப்பாகவைத்து விட்டார்கள். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் தானே ராமதாஸ் பிரச்சனை பண்ணுவார்?. இப்படி எடக்கு மடக்காக வைத்தால்என்ன செய்வார் என்று நினைக்கிறார்கள் போலும்.


மொத்தத்தில் தமிழில் பெயர் வைப்பதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் தில்லராம். ஏ.பி. பிலிம் கார்டன் நிறுவனத்தார் இதை தயாரிக்கிறது.

சத்யராஜ் நடித்த 24 மணி நேரம், நூறாவது நாள் ஆகிய தில்லர் படங்கள் பெரும் வெற்றியதைப் போல இந்தப் படமும் மெகா ஹிட் ஆகும்என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

கூடவே ஜனப்பிரியா என்ற சுனிதா வர்மாவின் கவர்ச்சியையும் நம்பியிருக்கிறார்கள்.

சுனிதா தவிர மும்பை அழகி ஒருவரும் இதில் நடிக்கிறார். இந்த மும்பை நடிகையைத் தவிர சீனா தானா புகழ் ரகஸ்யாவின் அட்டகாசமானகெட்ட ஆட்டமும் படத்தில் உண்டாம்.

இளம் நடிகர்களைக் கடுப்பேற்றும் வகையில் குட்டி குட்டி நடிகைகளுடன் குதியாட்டம் போட்டு வரும் சத்யராஜ், 6.2விலும் இளமை துள்ளஆட்டம் போடவிருக்கிறார்.இந்தப் படத்தி" நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரவீந்தரும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

செந்தில்குமார் இயக்கும் இந்தப் படத்துக்காக தனது கெட்டப்பை அடியோடு மாற்றிக் கொண்டுள்ளார் சத்யராஜ். பிரெஞ்சு தாடி, புது விக்.

விஜய்காந்த் போன்றவர்கள் பாட்டுக்காக வெளிநாட்டுக்கு பறப்பதைப் போல சத்யராஜும், டூயட்டுக்காக வெளிநாட்டுக்குப் போகப்போகிறாராம்.

ஆனாலும் சத்யராஜுக்கு ரொம்பத்தான் மச்சம் போங்கோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil