»   »  அணையும், ஜெயமாலாவும்!

அணையும், ஜெயமாலாவும்!

Subscribe to Oneindia Tamil

சபரிமலை சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய கன்னட நடிகை ஜெயமாலா, விரைவில் வித்தியாசமான ஒரு பொருளில் படம் தயாரிக்கப் போகிறார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எனது கணவருடன் சென்றேன், கோவில் சன்னிதானம் வரை சென்றேன், அய்யப்பன் விக்கிரகத்தைத் தொட்டு வணங்கினேன் என்று சில மாதங்ளுக்குக்கு முன்பு கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயமாலா.

இந்த சர்ச்சை ஒரு வழியாக தற்போது ஓய்ந்துள்ள நிலையில் உருப்படியான ஒரு காரியத்தை செய்துள்ளார் ஜெயமாலா. அவர் தற்போது பி.எச்.டி. ஆய்வை மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள அலமாட்டி அணை குறித்து ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுதான் அலமாட்டி அணை. இந்த அணை காரணமாக கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த அணையைத்தான் தனது பி.எச்.டி. ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளார் ஜெயமாலா. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 வருடங்களாக பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்தார் ஜெயமாலா.

இந்த அணை மற்றும் அதன் கட்டுமானப் பணியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டார் ஜெயமாலா. இந்த ஆய்வின் முடிவில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.

தற்போது தனது ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு புதிதாக ஒரு படத்தை உருவாக்கப் போகிறாராம் ஜெயமாலா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது ஆய்வுக் கட்டுரையை முடித்தது முதலை இதைப் படமாக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

5 ஆண்டுகள் அலமாட்டி விவகாரம் குறித்து ஆய்வு செய்துள்ளேன். அந்தப் பகுதி விவசாயிகள் நிலை என்னை மிகவும் பாதித்து விட்டது. அந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் அந்தப் பிரச்சினையை படமாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன் என்றார் ஜெயமாலா.

Please Wait while comments are loading...