»   »  பார்த்தன் கண்ட பரக்கோலம்!

பார்த்தன் கண்ட பரக்கோலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mamtha Mohandoss
ஜெயராம் நடிக்கும் புதிய மலையாளப் படத்திற்கு 'பார்த்தன் கண்ட பரக்கோலம்' என பெயரிடப்பட்டுள்ளது.

முழு நீள காமெடிப் படமாம். அனில் - பாபு இரட்டையர் இப்படத்தை இயக்குகின்றனர்.

மம்தா மோகன்தாஸ், ரசிகா ஆகிய இரு நாயகிகள் படத்தில் உள்ளனர். மம்தா மோகன்தாஸ் சின்ன இடைவெளி விட்டு மலையாளத்திற்குத் திரும்பியுள்ள படம் இது.

கவர்ச்சியில் மட்டுமல்லாது காமெடியிலும் கலக்க முடியும் என்பதை நிரூபிக்க இந்தப் படத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கலாபவன் மணி, சரிதாவின் முன்னாள் கணவர் முகேஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

தொடுபுழாவில் டிசம்பரில் ஷூட்டிங்கை ஆரம்பித்து முடிக்கவுள்ளனராம். பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Read more about: jayaram paralokam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil