»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பரபரப்பாகப் பேசப்பட்ட ஜே.ஜே ரசிக மகா ஜனங்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளிவிட்டுள்ளது.

தீபாவளிக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படத்தை, பிதாமகன், திருமலை, ஆஞ்சநேயா பயத்தின் காரணமாகதள்ளிப் போட்டார் சரண். அப்போதே படம் குறித்து சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், போதிய தியேட்டர்கள்கிடைக்கவில்லை என்று சொல்லி சமாளித்தார்கள் ஜே.ஜே தரப்பில்

அமர்க்களம் மூலம் அஜீத்துக்கும், பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரஷாந்துக்கும், ஜெமினி மூலம் விக்ரமுக்கும்திருப்பு முனையை ஏற்படுத்திய சரணின் படம் என்பதால் ரசிகர்களை விட மாதவன் தான் மிகவும் எதிர்பார்ப்புடன்இருந்தார்.

ஆனால், பாரதிராஜாவின் மகன் மனோஜை வைத்து அல்லி அர்ஜூனா படத்தை எடுத்துத் தோற்ற சரண்,இப்போது மாதவனை வைத்து மீண்டும் தோல்வி கண்டுள்ளார். அல்லி அர்ஜூனா குறைந்த பட்ஜெட் படம்என்பதால் தயாரிப்பாளர் தப்பித்துக் கொண்டார்.

ஆனால், ஜே.ஜே படத்துக்கு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கோடிகளைக் கணக்கில்லாமல் கொட்டினார். போட்டகாசு திரும்ப வருமா என வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்ரவிச்சந்திரன் படு டென்சனில் இருக்கிறார்.

படத்தில் மாதவன் நன்றாகவே வீணடிக்கப்பட்டுள்ளார். அமோகா, பூஜா என மறைமுக கவர்ச்சி, ஓபன் கவர்ச்சிக்குஇரு ஹீரோயின்களை இறக்கிவிட்டுவிட்டு திரைக் கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர்.

ஆங்கிலப் படமான செரண்டிப்பிட்டியை காப்பி அடித்துள்ளார்கள். ஆனால், காப்பி அடித்ததைக் கூட சரியாகசெய்யவில்லை. பாடல்கள் மற்றும் கேமரா தான் சொல்லிக் கொள்ளும்படியாக உள்ளது.

அமோகா பார்க்க அம்சமாய்த்தான் இருக்கிறார். ஆனால், ஜவுளிக் கடை பொம்மை மாதிரி முகத்தில் எந்தபாவனையும் காட்ட முடியாமல் தடுமாறியிருக்கிறார். இன்னொரு ஹீரோயின் பூஜாவின் உடைகளை உருவிஎடுத்திருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பேதும் இல்லை. அவரும் அதற்கெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.

இதனால் படத்தில் இரு ஹீரோயின்களும் வேஸ்ட். நடிக்க வாய்ப்பில்லாததால் மாதவனும் வேஸ்ட்ஆக்கப்பட்டிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே வசூலில் படுக்க ஆரம்பித்துவிட்ட ஜே.ஜே. படம் சே.. சே.. ஆகியிருக்கிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil