»   »  பட்டையை கிளப்பும் நான் அவனில்லை

பட்டையை கிளப்பும் நான் அவனில்லை

Subscribe to Oneindia Tamil

40 வருடத்திற்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நான் அவனில்லை படம், ஜீவன் பிளஸ் ஐந்து மெகா நாயகிகளின் கூட்டணியில் மீண்டும் அதே பெயரில் ரீமேக் ஆகி திரைக்கு வந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது.

கே.பாலச்சந்தர் இயக்க, ஜெமினி கணேசன் நடிக்க, கூட ஐந்து நாயகிகளும் திறமை காட்ட உருவான பாடம் நான் அவனில்லை. இப்படத்தை தற்போது ரீமேக் செய்துள்ளனர்.

இதில் ஜெமினி வேடத்தில் ஜீவன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, மாளவிகா, ஜோதிர்மயி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக் கூறியுள்ளார்.

படத்தின் இயக்குநர் செல்வா கூறுகையில், கே.பாலச்சந்தர் சார் எனது குரு. எனவே அவர் இயக்கிய இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படத்தை ரீமேக் செய்யப் போகிறேன் என்று அவரிடம் கூறியவுடனேயே அவர் ஓ.கே. சொல்லி விட்டார் என்றார் செல்வா.

கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆன புதுப் படங்களில் தற்போது ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருவது நான் அவனில்லைதான். நேற்றுதான் படம் ரிலீஸ் ஆகியிருந்தாலும் கூட தியேட்டர்களில் காணப்படும் மெகா கூட்டம் இப்படம்தான் சம்மர் ரிலீஸ்களில் வின்னர் என்பதை கட்டியம் கூறுவதாக அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil