»   »  தாயுடன் நடிகை டயானா சமரசம்?

தாயுடன் நடிகை டயானா சமரசம்?

Subscribe to Oneindia Tamil
Jennifer
காணாமல் போய், பின்னர் திரும்பி வந்து, திருச்சி கோர்ட்டில் தனது வளர்ப்புப் பெற்றோர் மீது பரபரப்பு புகார்களை சுமத்தி சலசலப்பை ஏற்படுத்திய நடன நடிகை டயானா ஜெனீபர், தனது தாயாருடன் சமரசமாக போக முடிவு செய்துள்ளார்.

திருச்சி பொன்மலை தெற்கு திருநகரை சேர்ந்தவர் மரிய புஷ்பம். இவரது வளர்ப்பு மகள் டயானா ஜெனிபர். 19 வயதான டயானா கடந்த 2-ந்தேதி திடீரென காணாமல் போனார்.

அவரை ஜவுளிக்கடை அதிபர் உசேன் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக மரியபுஷ்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உசேன் ஏற்பாட்டின் பேரில்தான் சமீபத்தில் திருச்சியில் நடந்த நமீதா கலை நிகழ்ச்சியில், டயானா நடனம் ஆடினார். மேலும் டான்ஸ் மாஸ்டர் கலாவின் குழுவிலும் இவர் ஆடியுள்ளார்.

டயானாவை போலீஸார் தேடி வந்த நிலையில் திடீரென 2 நாட்களுக்கு முன்பு திருச்சி வந்த டயானா நீதிமன்றத்தில் ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிய அவர் வளர்ப்பு பெற்றோர் ஆண்ட்ரூஸ், மரியபுஷ்பம் மற்றும் அல்போன்ஸ் ராஜ் ஆகியோர், தன்னை நடிக்க வைத்து பணம் சம்பாதிக்க முயல்வதாகவும், தீவைத்து எரிக்க முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். மேலும் தனக்கு பாதுகாப்பு அளிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் வக்கீல்கள் திடீர் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. டயானாவும் கோர்ட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையே, டயானாவும், மரியபுஷ்பமும் சமரசமாகப் போய் விட முயல்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டுள்ளனராம்.

இனிமேல் சண்டை வேண்டாம், மாறி மாறி புகார் கூற வேண்டாம். சமாதானமாகப் போய் விடலாம் என அவர்கள் பேசி முடிவெடுத்துள்ளனராம். எனவே விரைவில் இருவரும் பரஸ்பரம் அளித்துள்ள புகார்களை திரும்பப் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்கேப் ஆகி திரும்பிய நடிகை-பெற்றோர் மீது சரமாரி புகார்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil