»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஹாங்காங்க்:

தனது உடலை ஒரு பில்லியன் டாலருக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதாக வரும் செய்திகளை அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் மறுத்தார்.

செக்ஸ் பாம் ஜெனிபர் லோபஸ் ஹாங்காங்கில் புதிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டு விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:

என்னைப் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிக்கையை பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு நாள் இதை எனது குழந்தைகளிடம் காட்டுவேன்.பத்திரிக்கையாளர்கள் செய்தியைத் திரித்தும், மிகைப்படுத்தியும் எழுதுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து சிறந்த பாடகியாக வலம் வரும் ஜெனிபர் லோபஸ் நடித்த பல படங்களும் பெரும் வெற்றியைப் பெற்று வருகின்றன. இவர் நடித்து அண்மையில்வெளியான தி வெட்டிங் பிளானர் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

நிருபர்களிடம், ஜெனிபர் லோபஸ், தனது முன்னாள் ஆண் நண்பர் கோம்ப்ஸ் குறித்து பேச மறுத்தார். இவர் துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாகவும், நைட் கிளப்ஒன்றில் நடந்த தகராறு தொடர்பாகவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர். இப்போது இவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தச்சம்பவத்துக்குப் பிறகு ஜெனிபர் லோபஸூம், கோம்ப்ஸூம் பிரிந்து விட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil