»   »  மீண்டும் ஜானி

மீண்டும் ஜானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகேந்திரனின் நேர்த்தியான இயக்கம், இளையராஜாவின் இதயத்தை உருக்கும் இசை, ரஜினியின் வித்தியாச நடிப்பு, ஸ்ரீதேவியின் மயக்கும் நடிப்பில் உருவான சூப்பர் பம்பர் வெற்றிப் படம் ஜானி, ரீமேக் ஆகிறது.

ரஜினி வேடத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.இது ரிவர்ஸ் ரீமேக் காலம். முன்பெல்லாம் இந்தியிலிருந்து தமிழுக்கு வரும், அதேபோல தமிழிலிருந்து தெலுங்குக்கும், கன்னடத்திற்கும் படங்கள் போகும். ஆனால் இப்போது உல்டாவாகி விட்டது.

தமிழில் எடுக்கப்பட்ட படங்களையே திரும்பவும் தமிழில் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் ரஜினி நடித்த படங்களையே குறி வைத்து ரீமேக் களத்தில் குதித்துள்ளனர்.பில்லா, அஜீத் நடிப்பில் பில்லா -2007 என உருமாறுகிறது. விஜய் நடிக்க முரட்டுக்காளை ரீமேக் ஆகவுள்ளாக கூறப்படுகிறது.

விஜய்யின் கால்ஷீட் கிடைக்காததால் பட அறிவிப்பு தாமதமாகிறதாம். இப்போது ரஜினியின் இன்னொரு படமும் ரீமேக் ஆகப் போகிறது. இதிலும் அஜீத்தே நடிக்கவுள்ளார். 1980களில் வெளியாகி பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்ற ஜானிதான் அது.

மகேந்திரனின் அருமையான இயக்கத்தில் ரஜினியும், ஸ்ரீதேவி மிகச் சிறப்பாக நடித்த படம் ஜானி. ராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் தேனில் முக்கி எடுத்த பலாச் சுளைகளாக தித்திப்பாக இருந்தன.

அதிலும் ஜென்சியின் குரலில் இடம் பெற்ற காற்றில் எந்தன் கீதம், என் வானிலே ஆகியவை இன்னும் கூட காதுகளை விட்டு இறங்காமல் கிறங்கடிக்கும் பாடல்கள். ரஜினி இரண்டு வித்தியாசமான வேடங்களில் அசத்தியிருப்பார்.

தீபாவும் படத்தில் முக்கிய ரோலில் அசத்தியிருப்பார். இந்தப் படத்தை இப்போது மகேந்திரனின் மகன் ஜான் (இவர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர்) ரீமேக் செய்யவுள்ளார்.

ரஜினி வேடத்தில் அஜீத் நடிக்கிறார். படத்தின் மற்ற கேரக்டர்களில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லையாம்.

தீபா வேடத்தில் நமீதாவை நடிக்க வைக்கலாமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil