»   »  மருத்துவமனையில் ஜோதிகா:இரட்டை குழந்தைக்கு தாயாகிறார்

மருத்துவமனையில் ஜோதிகா:இரட்டை குழந்தைக்கு தாயாகிறார்

Subscribe to Oneindia Tamil

நடிகை ஜோதிகா பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கடந்த செப்டம்பர் 11ம் தேதி கோலிவுட் சூப்பர் ஜோடிகளான சூர்யா-ஜோதிகா திருமணம் நடைபெற்றது.


திருமணத்திற்கு பின் முழு ஹவுஸ் ஒய்ப் ஆனார். பாதியில் நின்ற படங்களை மட்டும் முடித்துக் கொடுத்தார். இந் நிலையில் இப்போது அம்மாவாகப் போகிறார் ஜோதிகா.

நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜோதிகா பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜோதிகாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என ஸ்கேனில் தெரியவந்துள்ளதாம். இதனால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறது சிவக்குமாரின் குடும்பம்.

வரும் 13ம் தேதி குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஆடி அமாவாசை, மிக நல்ல நாள் என்பதால் இன்றே ஜோதிகாவை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டார்களாம்.

சூர்யா தனது ஷூட்டிங் அனைத்தையும் கேன்சல் செய்துவிட்டு மருத்துவமனையிலேயே மனைவிக்கு துணையாக இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil