»   »  4வது குழந்தையை தத்தெடுத்த ஜூலி

4வது குழந்தையை தத்தெடுத்த ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலி வியட்நாமைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

ஹாலிவுட்டின் அழகு ராணி ஜூலியும், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இளம்பெண்களின் கனவு நாயகன் பிராட் பிட்டும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. அதன் பெயர் ஷிலோ நோவல்.

இந்தக் குழந்தை தவிர கம்போடியாவிலிருந்து மட்டாக்ஸ் என்ற குழந்தையையும், எத்தியோப்பியாவிலிருந்து ஸஹாரா என்ற குழந்தையையும் ஜூலி, பிராட் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், வியட்நாமிலிருந்து ஒரு குழந்தையை ஜூுலி தத்தெடுத்துள்ளார். அக்குழந்தையின் பெயர் பாம் குவாங் சாங். இக்குழந்தைக்கு பாக்ஸ் தியன் ஜூலி என ஜூலி பெயரிட்டுள்ளார்.

இந்தக் குழந்தைக்கு மூன்றரை வயதாகிறது. வியட்நாமின் ஹோசி மின் சிட்டி நகரில் உள்ள அநாதை இல்லத்திலிருந்து இக்குழந்தையை ஜூலி தத்தெடுத்துள்ளார்.

இதுதொடர்பான ஆவணங்களில் அவர் கையெழுத்துப் போடுவதற்காக ஹோ சி மின் நகருக்கு வந்திருந்தார். ஜூலியின் பிரபலத்தையொட்டி ஆவணங்களை பூர்த்தி செய்யும் வேலையை வியட்நாம் அதிகாரிகள் விரைவுபடுத்தினர்.

தத்தெடுப்பதற்கான சம்பிரதாய நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்து ஹனோய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகத்தில் சில ஆவணங்களில் ஜூலி கையெழுத்திட வேண்டும். அது முடிந்தவுடன் வியட்நாம் குழந்தையை அமெரிக்காவுக்கு ஜூலி கொண்டு செல்ல முடியும்.

வியட்நாம் சட்டப்படி கல்யாணம் ஆகாத தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க முடியாது. இதனால் பிராட்டை ஜூலி உடன் அழைத்து வரவில்லை.

இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் பிராட் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் ஜூலி ஹோசி மின் சிட்டிக்கு வந்து தத்தெடுக்கவுள்ள குழந்தைைய தேர்வு செய்து விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலியும், பிராடும் 2005ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது முதல் இருவரும் இணைந்து வசித்து வருகின்றனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் இணைந்து வாழப் போகிறார்களாம்.1999ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil