ஜூனியர் என்டிஆர்-சந்திரபாபு பேத்தி திருமணம்

By Staff

Junior NTR and Lakshmi Pranathi
என்.டி.ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆருக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் பேத்தி லட்சுமி பிரணதியை அவர் மணக்கிறார்.

என்.டி.ராமராவின் மகன் அரிகிருஷ்ணாவின் 2வது மனைவியின் மகன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகாரகத் திகழ்கிறார்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்காக கடந்த தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். அப்போது விபத்தில் அடிப்பட்டு தேறி எழுந்து, இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜாதகப்படி திருமணம் செய்து வைத்தால்தான் தொடர்ந்து ஆபத்து இல்லாமல் இருக்கும் என ஜோசியர்கள் கூறியுள்ளதால், உடனடியாக திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

மணமகள் பெயர் லட்சுமி பிரணதி. பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் மல்லிகா, சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. உறவு முறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பேத்தியாகிறார் லட்சுமி பிரணதி.

திருமண பேச்சுவார்த்தை சந்திரபாபு நாயுடு வீட்டில் நேற்று நடந்தது.

சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மணமகனின் அப்பா அரிகிருஷ்ணா, தாய் ஷர்மிளா, என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா, அரிகிருஷ்ணாவின் முதல் மனைவி மகன்களும் நடிகர்களுமான ஜானகிராம், கல்யாண்ராம். மணமகளின் தந்தை சீனிவாசராவ், தாய் மல்லிகா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண உறுதி செய்து கொண்டனர்.

மணமகள் இப்போதுதான் பிளஸ்-1 படிப்பதால் மார்ச் மாதம் தேர்வு முடிந்ததும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. மே மாதம் மணமகளுக்கு 18 வயதும், ஜுனியர் என்.டி. ஆருக்கு 27 வயதும் பிறக்கிறதாம். அப்போது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X