»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தன்னைத் தொடர்ந்து தனது தங்கை மோனலையும் தமிழுக்கு இழுத்து வந்தார் சிம்ரன். மோனல் மறைவைத்தொடர்ந்து இன்னொரு தங்கை (அக்காவைப் போல இருக்கிறார்) ஜோதியையும் கூட்டி வந்தார்.

ஆனால், கோலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியாவில்லை. நாசரிடம் பேசி அவர் இயக்கிய பாப்கார்ன் படத்தில்(வந்ததே தெரியலையே என்று முழிக்காதீர்கள், அந்த அளவுக்கு தியேட்டர்களை விட்டு ஓட்டமாக ஓடிய படம்அது) ஜோதிக்கு சான்ஸ் வாங்கித் தந்தார் சிம்ரன். அந்தப் படத்தில் சிம்ரனுக்கே மகளாக நடித்தாார் ஜோதி.

அந்தப் படம் ஓடாததோடு, ஜோதியை தமிழில் ஹீரோயினாக்கும் சிம்ரனின் முயற்சிகளும் பலிக்கவில்லை.இதனால் மீண்டும் அவரை மும்பைக்கு பிளேன் ஏற்றிவிட்டார் சிம்ரன். அங்கு போனவர் இந்திப் படங்களில் சான்ஸ்தேடி அலைந்தார். எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இப்போது ஆல்பங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஜோதி. அவரது சமீபத்திய இசை, நடனஆல்பமான சல்தி ஜவானி என்ற இசைத் தொகுப்பு பரபரப்பாக விற்பனை ஆகியுள்ளதாம்.

காரணம், அதில் குண்டக்க மண்டக்க ஜோதி ஆடியுள்ள நடனங்கள்தான். காட்ட வேண்டியதைக் காட்டி ஜோதிபோட்டுள்ள ஆட்டத்துக்கு நிறையவே வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து நிறைய ஆல்பம் சான்ஸ்கள் வருகின்றனவாம். எதையும் விட்டுவிட வேண்டாம்.

எல்லோரிடமும் அட்ாவன்ஸ் வாங்கு, ஒண்ணு விடாம ஆடு என்று சிம்ரன் அட்வைஸ் செய்துள்ளாராம்.

இதற்கிடையே ஆத்மா என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கால்ஷீட்டைக் கொடுத்த கையோடு தங்கை ஜோதிக்கு அதில் ஒரு ரோலை வாங்கிவிட்டாராம் சிம்ரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil