»   »  ஜோதிகாவுக்கு வளைகாப்பு!

ஜோதிகாவுக்கு வளைகாப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கர்ப்பிணியாக உள்ள திருமதி ஜோதிகா சூர்யாவுக்கு ஏப்ரல் மாதம் 30ம் தேதி வளைகாப்பு நடத்த சிவக்குமார் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

சூர்யாவைக் காதலித்து கைப்பிடித்து மங்கலகரமாக குடும்பம் நடத்தி வரும் ஜோதிகா கர்ப்பமாக உள்ளார். இப்ேபாது அவருக்கு 7வது மாதம் நடக்கிறதாம். இதையடுத்து அவருக்கு வளைகாப்பு நடத்த சிவக்குமார் குடும்பம் முடிவு செய்துள்ளது.

தங்களது குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால், பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த சிவக்குமார் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனராம்.

ஏப்ரல் 30ம் தேதி வளைகாப்பு நடக்கிறது. இதில் உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைக்கிறார் சிவக்குமார். முதல்வர் கருணாநிதி, ரஜினிகாந்த் ஆகிேயாருக்கும் நேரில் போய் அழைப்பு கொடுத்துள்ளாராம் சிவக்குமார்.

ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யா, ஜோதிகாவின் தலை வாரிசு பிறக்கும் என டாக்டர்கள் உத்தேச தேதி குறித்தக் ெகாடுத்துள்ளனராம்.

நலமாக வரட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil