»   »  சூர்யா-ஜோதிகா மகள் பெயர் தியா

சூர்யா-ஜோதிகா மகள் பெயர் தியா

Subscribe to Oneindia Tamil

சூர்யா, ஜோதிகா தம்பதிக்குப் பிறந்துள்ள செல்ல மகளுக்கு தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவக்குமார் அறக்கட்டளை சார்பில் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று நிதியுதவி வழங்கப்பட்டது.


கிட்டத்தட்ட 28 வருடங்களாக சிவக்குமார் இந்த உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்று மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி அளித்த சூர்யா, லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் நிதியுதவி வழங்கினார்.


பின்னர் அவர் பேசுகையில், அப்பாவின் ஆலேசானைப்படி இனி இந்த அறக்கட்டளை அகரம் பெளண்டேஷன் என்ற பெயரில் செயல்படும்.

கிராமப்புற மாணவர்கள் கல்வியில் இந்த அறக்கட்டளை இனி அதிக கவனம் செலுத்தும்.

செங்கல்பட்டு அருகே பாலூர் அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியை தத்தெடுக்கவுள்ளோம் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், எங்கள் மகளுக்கு தியா என பெயர் சூட்டியுள்ளோம். உங்கள் ஆசிர்வாதமும் அன்பும் என் குழந்தைக்கு வேண்டும் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil