»   »  கண்ணீர் மல்க விடைபெற்ற ஜோ!

கண்ணீர் மல்க விடைபெற்ற ஜோ!

Subscribe to Oneindia Tamil

மொழி பட ஆடியோ கேசட் விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா, கண்ணீர் மல்க திரையுலகிலிருந்து விடைபெற்றார். விழாவில் பேசிய முதல்வர்கருணாநிதியின் மகள் கனிமொழி, ஜோதிகாவை நடிக்க விடாமல் தடுப்பதாக கூறியதால் முகம் சிவந்து போனார் சூர்யா.

கல்யாணத்திற்கு முன் ஜோதிகா நடித்துக் கொடுத்த படம் மொழி. வாய் பேசாத, காது கேளாத பெண்ணாக இதில் அற்புதமாக நடித்துள்ளார்ஜோதிகா. பிரகாஷ் ராஜ் படத்தைத் தயா>த்துள்ளார். ராதாமோகன் இயக்கியுள்ளார்.

சூர்யாவுடன் கல்யாணம் முடிந்த பிறகு இனிமேல், ஜோதிகா நடிக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்யாணத்திற்குப் பிறகுபச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் மொழி படங்களின் மிச்சக் காட்சிகளை மட்டும் நடித்துக் கொடுத்தார் ஜோதிகா.

மொழி படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜோதிகாவின் கல்யாணத்திற்குப் பிறகே எடுக்கப்பட்டன. கடந்த வாரம்தான் படப்பிடிப்பு முழுமையாகமுடிந்தது. இதையடுத்து சத்யம் திரையரங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆடியோ கேசட் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது படத்தை வெகுவாகப் பாராட்டினார். ஆனால் ஜோதிகா குறித்துஅவர் பேசப் பேச சூர்யாவின் முகம் சிவந்து போனது, கோபம் முகத்தில் தெறித்ததைக் காண முடிந்தது.

அப்படி என்னதான் பேசினார் கனிமொழி? இதோ ....

சமீப காலத்தில் நான் பார்த்த ரொம்ப டீசன்ட்டான படம் இதுதான். ஒவ்வொரு காட்சியையும் அறிவுப்பூர்வமாகவும், சின்சியராகவும்அமைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இது வெகு அபூர்வம். வசனங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. பெண்களுக்கு மரியாதை சேர்ப்பவையாக உள்ளன.பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பவர்கள் இன்று மிகவும் குறைந்து போய் விட்டனர்.

வைரமுத்து அருமையான பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு வித்யாசகர் அற்புதமாக இசையமைத்துள்ளார். சினிமாவுக்குப் போன பின்னரும்கூட தனது கவித்திறமையை இழக்காத கவிஞர் வைரமுத்து மட்டும்தான் என நான் நினைக்கிறேன்.

சினிமாவில் நுழைந்த பல கவிஞர்கள் சில வருடங்களிலேயே அதில் மூழ்கி காணாமல் போய் விடுகிறார்கள். அவரது பாடல்களில் அழகான,அர்த்தப்பூர்வமான பல வரிகள் உள்ளன.

உதாரணத்திற்கு, பூவின் மொழி மணமா? நிறமா? என்ற வரியைச் சொல்லலாம். என்ன ஒரு அருமையான சிந்தனை?

இதேபோல படத்தில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து நான் அசந்து விட்டேன். இங்கே ஜோதிகா குறித்த என எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். இதுதான் அவரது கடைசிப் படம் என்று கூறினார்கள்.

ஜோதிகாவின் இந்த முடிவுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு சூர்யா மீது மிகுந்த கோபம் வந்தது. ஜோதிகாவைப் போன்ற நடிகைகள்திரையுலகை விட்டு விலகக் கூடாது. ஜோ, தயவு செய்து உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது,திரையுலகுக்கும் நல்லது ...

கனிமொழி இவ்வாறு பேசப் பேச ஜோதிகா அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். முகத்தில் சலனம் ஏதும் இல்லை. ஆனால்ஜோதிகாவை நடிக்க விடாமல் சூர்யா தடுப்பதாக கனிமொழி கூறியபோது சூர்யாவின் முகம் இறுகி, சிவந்து போனது.

கனிமொழிக்குப் பின்னர் வைரமுத்து பேசினார். வழக்கமான, கவி நயமான, நறுக் பேச்சைக் கொடுத்தார் வைரமுத்து. தனது பேச்சின்போதுஇன்றைய திரைப்பாடல்கள் குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இன்றைக்கு நிறையப் பேர் பாடல் வரிகளை கவனிப்பதில்லை. மாறாக,அவர்களது காதுகள் வேகத்திற்கு மட்டும் இசைந்து கொடுக்கின்றன.

கனிமொழி கூறியதைப் போலவே நானும் ஜோதிகாவுக்கு கோரிக்கை வைக்கிறேன். மறுபடியும் நடிக்க வாருங்கள் (மறுபடியும் சூர்யா முகம்சிவப்புச் சூரியனானது!)

நிகழ்ச்சியில், இயக்குநர் பிரியதர்ஷனை அழைத்து அவர் மூலம் ஜோதிகாவுக்கு நினைவுப் பரிசு வழங்க கோரினார் பிரகாஷ் ராஜ்.

பரிசை வழங்கிய பிரியதர்ஷன் பேசுகையில், (இவர்தான் ஜோதிகாவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்) ஜோதிகாவுக்கு நடக்கும் நல்லவிஷயங்களை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து நான் பார்த்து மகிழ்கிறேன் என்றார்.

பிரகாஷ் ராஜ் கைக்கு மைக் வந்தபோது அவரும் தன் பங்குக்கு திரையுலகை விட்டு ஜோதிகா விலகக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது ஜோதிகாவின் கண்களில் கண்ணீர் பெருகியதைக் காண முடிந்தது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் ஜோதிகா. ஆனால்பக்கத்தில் அமர்ந்திருந்த சூர்யாவோ எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் மெளனமாக அமர்ந்திருந்தார். லேசான தர்மசங்கடத்தையும் அவரிடம்காண முடிந்தது.

மொத்தத்தில் மொழி பட ஆடியோ கேசட் ரிலீஸ் விழாவாக இல்லாமல், போகாதீர்கள் ஜோதிகா என அத்தனை பேரும் கோரிக்கை வைத்தவிழாவாக மாறிப் போனது.

ஜோவின் மனதில் என்ன எண்ணம் ஓடியிருக்கும் என்பதை சொல்ல மொழி தேவையில்லை. ஆனால் சூர்யாவின் மனதில் என்னவெல்லாம்ஓடியிருக்கும் என்பதை அவரது முகமே வெளிச்சம் போட்டுக் காட்டியது.

Read more about: kanimozhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil