»   »  துண்டும் முண்டுமாக ஜோதிர்மயி

துண்டும் முண்டுமாக ஜோதிர்மயி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் அவனில்லை படத்தில் கிளாமர் சூறாவளியாக மாறி சுழன்றடிக்கப் போகிறாராம் ஜோதிர்மயி.

துண்டும் முண்டுமாக ஜோதிர்மயி

நான் அவனில்லை படத்தில் கிளாமர் சூறாவளியாக மாறி சுழன்றடிக்கப் போகிறாராம் ஜோதிர்மயி.

பல காலத்திற்கு முன்பு ஜெமினி கணேசனின் சில்மிஷ நடிப்பில் வெளியான படம் நான் அவனில்லை. பிளே பாய் வேடத்தில் கலக்கியிருப்பார் ஜெமினி. படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட ஜெமினியின் நடிப்பும், அவர் செய்த காதல் சில்மிஷங்களும் பெரிதாக பேசப்பட்டன, பாராட்டப்பட்டன.

அதே படம் அதே பெயரில் ஜீவன் நடிப்பில் மீண்டும் உருவாகிறது. ஜீவனுக்கு இதில் சில் சினேகா, நச் நமீதா, ஜோர் ஜோதிர்மயி, கிக் கீர்த்தி சாவ்லா, மயக்கும் மாளவிகா என ஐந்து ஜோடிகள்.

ஐந்து ஹீரோயின்கள் என்றாலும் கூட அத்தனை பேருக்கும் சரிவிகித சமானத்தில் காட்சிகளை வைத்துள்ளனராம். ஐந்து பேருக்கும் நடிப்போடு, கிளாமர் சைடும் ஸ்டிராங்காக திட்டமிடப்பட்டுள்ளாம்.

இவர்களில் நமீதாவைப் பற்றியும், மாளவிகாவைப் பற்றியும் சொல்ல வேண்டாம். எள் என்றால் எண்ணையைப் பிழிந்து தலையிலும் தேய்த்து விடும் அளவுக்கு வேகமானவர்கள்.

சினேகாவுக்கு கொஞ்சம் போல கிளாமர் இருக்கிறதாம். கீர்த்திக்கும் திருப்திகரமான அளவில் திருவிளையாடல் புரிய வாய்ப்பு இருக்கிறதாம். ஜோதிர்மயிக்குத்தான் ஜோரான வாய்ப்பாம்.

ஜெமினியின் நான் அவனில்லை படத்தில் ஜெயபாரதி நடித்த கேரக்டரில் ஜோதிர் நடிக்கிறாராம். ஜெயபாரதி அந்தக் காலத்திலேயே கிளாமரில் கலக்கியவர். அவர் நடித்த பெரும்பாலான மலையாளப் படங்களில் முண்டுதான் அவரது காஸ்ட்யூமாக இருக்கும்.

நான் அவனில்லை படத்திலும் அவர் கிளாமராகவே நடித்திருந்தார். துண்டும், முண்டுமாக வந்து பின்னி எடுத்திருப்பார். அந்தக் கேரக்டருக்கு சற்றும் குறைச்சல் இல்லாத வகையில், ரீமேக் நான் அவனில்லை படத்திலும் கலக்கலாக நடித்து வருகிறாராம் ஜோதிர்மயி.

கடந்த சில படங்களில் (பெரியார், சபரி) கிளாமர் காட்ட தோது சரிப்படாததால், அடக்கி வாசித்திருந்தார் ஜோதிர். அவற்றுக்கெல்லாம் சேர்த்து நான் அவனில்லையில் பின்னி எடுத்து பிய்த்து வாங்கி வருகிறாராம்.

நமீதா, மாளவிகா, கீர்த்திக்குப் போட்டியாக ஜோதிரும் கிளாமரில் கில்லி ஆடி வருகிறாராம். இதுவரை அவர் சம்பந்தப்பட்ட கிளாமர் ஸ்டில்களை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். மலையாளத்து சந்தனச் சேலையில் சிலை போல இருக்கும் ஸ்டில்களை மட்டுமே இப்போதைக்கு வெளியிட்டுள்ளனர்.

விரைவில் துண்டும், முண்டுமாக ஜோதிர் ஜோராக காணப்படும் காட்சிகளை களம் இறக்கி விட்டு ரசிகர்களை லயிக்க வைக்கப் போகிறார்களாம்.

கொசுரு: இதுவரை தனது கல்யாணச் செய்தியை மறைத்து வந்தார் ஜோதிர்மயி. ஆனால் இப்போதெல்லாம் யாராவது உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா என்று கேட்டால், ஆயிடுச்சே என்று தைரியமாக சொல்ல ஆரம்பித்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil