»   »  கஞ்சா கருப்பு ஜோடி ஜோதிர்மயி!!!

கஞ்சா கருப்பு ஜோடி ஜோதிர்மயி!!!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் போலிருக்கிறது. எது நடக்கும் என்றே கணிக்க முடியாத அளவுக்கு விஷயங்கள் நடக்கின்றன.

வடிவேலு ஹீரோ ஆனாலும் ஆனார் தற்போது பல தயாரிப்பாளர்கள் அவர் வீட்டின் முன்பு கனத்த சூட்கேஸ்களுடன் ஹீரோ வேசம் இருக்கு என்றபடி காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து வடிவேலு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்.

இதே மாதிரியான அதிர்ஷ்டம் இப்போது கஞ்சா கருப்புவுக்கு அடித்திருக்கிறது.

மதுரை பாஷையும் லுக்குமாக உலா வரும் கருப்புவை சினிமாவில் அடையாளம் காட்டியவர் அவர் ஊர்க்காரரான இயக்குனர் அமீர். சினிமா சான்ஸ் தந்ததோடு இருக்க இடமும் கொடுத்து வளர்த்துவிட்டார். (ஆரம்ப காலத்தில் வடிவேலுக்கு ராஜ்கிரண் சோறு போட்டு, இடம் தந்து உதவியது போல)

இப்போது கஞ்சா கருப்புவக்கு நேரம் செட்டாகிவிட்டது போலிருக்கிறது. நிறைய வாய்ப்புகளோடு கோலிவுட்டில் மகிழ்ச்சியாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை சிங்கிளாகவோ கூட்டதோடோ வந்து போய்க் கொண்டிருந்த கருப்புக்கு இப்போது ஹீரோ வாய்ப்பே வந்துவிட்டது.

அவருக்கு ஜோடி ஜோதிர்மயி.

வடிவேலுவை ஹீரோவாக்கி இம்சை அரசன் படத்தை இயக்கிய சிம்புத்தேவன், தற்போது இயக்கும் அறை எண் 305ல் கடவுள் படத்தில் ஹீரோவாகிறார் கஞ்சா கருப்பு.

இப்படத்தில் சந்தானமும் நடிக்கிறார். இவருக்கு ஜோடி மதுமிதா.

மேலும் பிரகாஷ் ராஜும் இருக்கிறார். இவருக்கு எமன் வேடமாம் (செல்லம்.. பின்னிரு). படப்பிடிப்பு ஜூலை 14ம் தேதி ஆரம்பிக்கப்படுகிறது.

தன்னை சுற்றிலும் நடப்பதைப் பார்த்து கருப்பு கிறுகிறுத்துப் போயிருக்கிறாராம்.

கருப்புவுக்கும் சந்தானத்துக்கும் அதிர்ஷ்டம்.. ஜோதிர்மயிக்கும் மதுமிதாவுக்கும் இது என்ன அதிர்ஷ்டமா இல்ல....?!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil