»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீனா திருமணத்திற்கு தயாராகி விட்டார். மாப்பிள்ளை லண்டனைச் சேர்ந்தவர் என்கிறார்கள்.

சீனியர் நடிகைகள் ஒவ்வொருவராக கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி வருகிறார்கள். முதலில் செளந்தர்யா,சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன். அந்த வரிசையில் அடுத்த சேரவிருப்பர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் மீனா.

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் வயதும் ஏறிக் கொண்டே போவதால், மீனாவுக்கு கல்யாணம் செய்துஅவரது தந்தை தான் முதலில் முயற்சி எடுத்தார்.

ஆனால், ஏதாவது பட வாய்ப்பு வரும், ரஜினியின் அடுத்த படத்தில்கூட சான்ஸ் கிடைக்கும், அதுவரை பொறுத்திருக்கலாம் என தாய் மல்லிகாவும் மீனாவும் காத்திருந்தனர்.

மீனாவும் அடிக்கடி ரஜினிக்கு போன் போட்டு தன்னை நினைவில் வைத்திருக்குமாறு அனத்திக் கொண்டேஇருந்தார். ஆனால், இப்போதைக்கு நான் படம் எடுக்கலம்மா, அப்படியே இருந்தாலும் உனக்கு முக்கிய ரோல் தரமுடியாது என்று ரஜினி டமார் என்று போட்டு உடைக்க, திருமணத்துக்கு தலையை ஆட்டிவிட்டார் மீனாஎன்கிறார்கள்.

இதையடுத்து மல்லிகாவின் காங்கிரஸ் கனெக்ஷன்சன் மூலம் லண்டன் மாப்பிள்ளை சிக்கினாராம். சமீபத்தில்மீனாவும் தாயாரும் ரகசியமாக லண்டன் போய் மாப்பிள்ளையைச் சந்தித்தனர். மாப்பிள்ளையை மீனாவுக்குபிடித்துப் போய்விட்டது.

இதனால் விரைவில் டும் டும் என்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா முதல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரைபெரிய தலைகள் தலைமையில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

எங்கிருந்தாலும் வாழ்க..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil