twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருமாண்டியில் கிடைத்த வாய்ப்பு - கமலுடனான முதல் சந்திப்பு குறித்து காதல் சுகுமார்

    |

    சென்னை: விருமாண்டி திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பு குறித்தும், கமல்ஹாசனுடன் முதன் முதலாக அருகில் நின்று பேசியது குறித்தும் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் காதல் சுகுமார்.

    அலங்காநல்லூரைச் சேர்ந்தவன் என்பதால் தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

    மாடு பிடிக்கும் காட்சியில் வர்ணனையாளர் கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டு பின்னர் கமலின் நண்பர்களில் ஒருவராக கதாப்பாத்திரம் மாறியது குறித்தும் காதல் சுகுமார் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

    ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொண்டேன் என நினைத்தேன்.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சுவாரஸ்யம்ஷங்கரை பார்த்து சூடு போட்டுக் கொண்டேன் என நினைத்தேன்.. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சுவாரஸ்யம்

    பெரியகருப்பு தேவரால் கிடைத்த வாய்ப்பு

    பெரியகருப்பு தேவரால் கிடைத்த வாய்ப்பு

    ராஜ்டிவில் ஊர்வம்பு நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது, பெரிய கருப்பு தேவரின் மகன் விருமாண்டி எனது உதவியாளர். அப்போது அடிக்கடி அவர் வீட்டிற்குச் செல்வேன். ஒருநாள் வீட்டிற்குச் சென்ற போது கமலின் விருமாண்டி படத்தில் தான் ஒரு பாட்டு பாடப் போவதாக பெரியகருப்பு தேவர் சொன்னார். என்னையும் மறுநாள் ரெக்கார்டிங்கிற்கு வர சொன்னார். அங்கு போன போது தான் கமலுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. என்னை நன்றாகப் பாடுவேன் என அறிமுகம் செய்து வைத்தார் பெரியகருப்பு தேவர் என காதல் சுகுமார் தெரிவித்திருக்கிறார்.

    வர்ணனையாளர் கதாப்பாத்திரம்

    வர்ணனையாளர் கதாப்பாத்திரம்

    நான் அலங்காநல்லூர்காரன் என்பதால், கமல் என்னிடம் மாடு பிடிப்பது போன்று எடுக்கப்பட்ட வாடிவாசல் புகைப்படங்களைக் காட்டினார். நான் பார்த்துவிட்டு, "சார் இது ரொம்ப ரிஸ்க் சார்.. இப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க என்றேன்". அதைக் கேட்டு பொறுமையாக எனக்கு விளக்கமளித்தார் கமல். பின்னர், மாடு பிடிக்கும் போது இப்படியெல்லாம் வர்ணனை செய்வார்கள் என செய்து காட்டினேன். உடனே மகிழ்ச்சியடைந்த கமல் அலுவலகம் வரச் சொன்னார். முதலில் வர்ணனையாளர் கதாப்பாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் போக போக கமலுடனேயே வரும் அளவிற்கு கதாப்பாத்திரம் மாற்றப்பட்டது. அதை நினைத்தால் இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கமல் கொடுத்த அட்வைஸ்

    கமல் கொடுத்த அட்வைஸ்

    படத்தில் ஒரு காட்சியில், ஜிம்னாஸ்டிக் செய்வது போல் காட்சி இருந்தது. அதற்கு யாராவது ஜிம்னாஸ்டிக் தெரிந்தவர்களை அழைத்தார்கள். நான் கமலிடம் சென்று எனக்குத் தெரியும் என்றேன். "அப்படியா, எங்க செய்யுங்க" என்றார். நானும் செய்து காட்டினேன். "நல்லாருக்கு.. ஆனால் இக்காட்சியில் உங்களைப் பயன்படுத்த முடியாது" என்றார். நான் அழுதுவிட்டேன். பின்னர் தனியே அழைத்துச் சென்று, "போற எடத்துல எல்லாம் ஜிம்னாஸ்டிக் தெரியும்னு சொல்லாதீங்க. அப்பறம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஜிம்னாஸ்டிக் செய்ய சொல்லிருவாங்க. நினைத்தாலே இனிக்கும் படத்தில் தெரியா தனமா மைக்கை பிடித்துவிட்டேன். அதன் பின்னர் மைக்கை விடுவதற்கு பெரும்பாடாகிவிட்டது. மைக் மோகன் என்று ஒருவர் வந்தார். அவரிடம் கொடுத்துவிட்டு விலகினேன்" என கமல் கொடுத்த அட்வைஸ் குறித்து காதல் சுகுமார் அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

    நடிகர் டூ இயக்குநர்

    நடிகர் டூ இயக்குநர்

    நிகழ்ச்சி தொகுப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகம் ஆகி, பின்னர் நடிகராகி தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் காதல் சுகுமார். திருட்டு விசிடி, சும்மாவே ஆடுவோம் என இரு படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kaadhal Sukumar Shares the Experience with Kamalhaasan in Virumaandi Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X