»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் படம் வெற்றியடைந்ததால் அதன் தயாரிப்பாளரும், பிரபல இயக்குநருமான ஷங்கர் படு குஷியாக உள்ளார்.

பிரம்மாண்டப் படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் ஆகியபடங்களை பிரபல தயாரிப்பாளர்களை வைத்து இயக்கியவர், முதல்வன் படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

எஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் புரொடக்ஷன் கம்பெனியைத் தொடங்கியவர், அதன் சார்பில் முதல்வன் படத்தை எடுத்தார்.சொந்தப் படம் என்பதற்காக ஷங்கர் செலவுகளைக் குறைக்கவில்லை.

வழக்கமான தனது பிரம்மாண்ட பாணியிலேயே படத்தைத் தயாரித்தார். அதையடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளிவந்தபாய்ஸ் படம் தோல்வியடைந்தது.

இப்போது விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் அந்நியன் படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இது அதிக பொருட்செலவு பிடிக்கும்படம் என்பதால், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இதை எடுத்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு பூஜை போட்ட பின்பு, அவரது சிஷ்யப் பிள்ளை பாலாஜி சக்திவேல் ஒரு கதை சொன்னார். கதை டச்சிங்காகஇருந்ததால் தனது எஸ் பிலிம்ஸ் சார்பிலேயே அதை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார்.

பாய்ஸ் ஹீரோக்களில் ஒருவரான பரத் ஹீரோவாக நடிக்க, கேரளாவைச் சேர்ந்த சந்தியா கதாநாயகியாக நடித்தார். காதல் என்றபெயரில் குறுகிய காலத் தயாரிப்பாக வெளிவந்த இந்தப் படம் இப்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது.

பெரிய ஹீரோக்கள் இல்லாவிட்டாலும், கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை இந்தப் படம் மீண்டும்நிரூபித்துள்ளது.

காதல் கதைதான் என்றாலும் அதை பாலாஜி சக்திவேல் கையாண்டிருந்த விதமும், பெரும்பாலோனோர் புதுமுகம் என்றாலும்அனைவரும் சிறப்பாக நடித்திருந்ததாலும் படம் வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் வெற்றியால் குஷியடைந்த ஷங்கர், பாலாஜி சக்திவேலை அழைத்து ஒரு கார் பரிசளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தித் தந்திருக்கிறார்.


இந்தப் படத்தின் வெற்றி பரத்திற்கும் சந்தோஷத்தைத் தந்துள்ளது. பாய்ஸ், 4 ஸ்டூடண்ட்ஸ் ஆகிய படங்கள் ஓடாத நிலையில்காதல் படம் அவருக்குப் பிரேக் கொடுத்துள்ளது.

நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

பத்தாம் வகுப்பு மாணவியான சந்தியாதான், படிப்பதா இல்லை தொடர்ந்து நடிப்பதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil