»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெளனம் பேசியதே இயக்குநர் அமீர் இயக்கும் புதிய படத்தில் கஜாலா நடிக்கிறார்.

மெளனம் பேசியதே படத்தில் காதலை வித்தியாசமான முறையில் காட்டிய அமீர், இன்னும் பெயரிடப்படாத,தனது இரண்டாவது படத்திற்கு கஜாலாவை கதாநாயகியாக்கி இருக்கிறார்.

தெலுங்கிலிருந்து வந்து ஏழுமலை, ‘யுனிவர்சிட்டி’ படங்களில் நடித்த கஜாலா, அப் படங்கள்தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தெலுங்குப் பக்கம் போனார். குறுகிய காலத்தில் அங்கு நம்பர் ஒன்கதாநாயகியாகி விட்டார்.

இந் நிலையில் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜாஇசையமைக்கிறார்.

அதேபோல சிபிராஜூக்கு ஜோடியாக ஜோர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் கஜாலா. இந்தப் படங்கள்தமிழில் தனக்கு ரீ எண்ட்ரி தரும் என கஜாலா நம்புகிறார்.

வழுக்கி விழுந்த லைலா

கம்பீரம் படப்பிடிப்பின் பாறையில் இருந்து வழுக்கி விழவிருந்த நடிகை லைலாவை நடிகர் சரத்குமார்காப்பாற்றினார்.

போலீஸ் கதைகள் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருவதால், சரத்குமார் லத்தியைத் தூக்க முடிவெடுத்துகம்பீரம் படத்தில் லைலாவுடன் நடித்து வருகிறார். படத்திற்கான பாடல் காட்சி ஒன்று கர்நாடகாவில் வழுக்குப்பாறை நிறைந்த மலையுச்சியில் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின்போது லைலா திடீரென்று இரண்டு கால்களும் வழுக்கியதால் கீழே விழப்போனார். அப்போதுசரத்குமார் கைகொடுத்து காப்பாற்றினார். மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி லைலாவுக்கு இன்னும்நீங்கவில்லை. சென்னை வந்த பின்பும் அதை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil