»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் சமீபத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான காக்க.. காக்க.. படத்தை ஆங்கிலத்தில் எடுக்க தயாரிப்பாளர் தாணுமுடிவு செய்துள்ளார். இதற்காக தாணுவும் இயக்குனர் கெளதமும் இன்று (சனிக்கிழமை) அமெரிக்கா செல்கின்றனர்.

ஆக்ஷன், கேமரா, திரைக்கதை, இயக்கம் என அனைத்து வகைகளிலும் ஹாலிவுட் படத்துக்கு இணையானவிறுவிறுப்பான படமாக காக்க.. காக்க வெளிவந்தது. தமிழில் உருவான முதல் ஹாலிவுட் தரப் படம் என்றுபெருமையுடன் இந்தப் படம் விமர்சிக்கப்படுகிறது.

தனக்கு கோடிக்கணக்கில் பண மழையைக் கொட்டி வரும் இந்தப் படத்தின் உரிமையை இந்தியில் பல கோடிக்குவிற்றுவிட்டார் தாணு. தெலுங்கில் அவரே தயாரிக்கிறார். கெளதம் தான் இயக்குகிறார்.

இந் நிலையில் காக்க. காக்கவை ஆங்கிலத்தில் எடுக்க ஹாலிவுட்டில் இருந்து சில தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கோனிக் சான்டர்ஸ், ஆலன் ரோஸ் ஆகிய ஹாலிவுட் கதாசிரியர்கள் ஏற்கனவே கெளதம் மற்றும்தாணுவைச் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றுள்ளனர்.

ஹாலிவுட் நிறுவனங்களுடன் சேர்நது தாணுவும் முதலீடு செய்து படத்தை எடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக, படத்தை கெளதமே இயக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு பெயர் கூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆங்ரிலத்தில் Gurarding on என்ற பெயரில் இந்தப் படம்தயாராக உள்ளது. படத்தின் நீளத்தை ஹாலிவுட்டுக்கு ஏற்ப ஒன்றரை அல்லது ஒன்றே முக்கால் மணியாக சுருக்கஉள்ளார்களாம்.

இதையடுத்து படம் தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க தாணுவும், கெளதமும் இன்று அமெரிக்காகிளம்புகின்றனர். லாஸ் ஏஞ்ஜெல்சில் கதை விவாதம், முதலீடு குறித்து ஆலோசனைகள் நடக்க உள்ளன.

திரைப்பட வினியோகஸ்தராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த தாணு, பின்னர் தயாரிப்பாளரானார். மிகபிரம்மாண்டமான படங்கள் எடுத்தவர். ஆளவந்தான் படத்தினால் கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரைநஷ்டப்பட்டார்.

ஆனாலும் சிறிய பட்ஜெட்டில் புன்னகைப் பூவே உள்ளிட்ட சில படங்களைத் தொடர்ந்து எடுத்தவர் அடுத்துபார்த்திபனால் தன்னிடம் அறிமுகப்படுத்தப்பட்ட கெளதமை நம்பி ரூ. 6 கோடி செலவில் காக்க. காக்கவைஎடுத்தார்.

கெளதமின் திறமையாலும் சூர்யாவின் சூப்பர் நடிப்பாலும் அட்டகாசமாய் வெளிவந்த இந்தப் படம் தாணுவுக்குகோடிகளைக் கொட்டியது. கொட்டிக் கொண்டுள்ளது.

நூறாவது நாளையும் தாண்டி பல இடங்களில் தொடர்ந்து இந்தப் படம் வெற்றிகரமார ஓடிக் கொண்டுள்ளது.

தமிழிலேயே சளைக்காமல் கோடிகளைக் கொட்டும் தாணு, ஹாலிவுட் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து நிச்சயம் மிகபிரம்மாண்டமாய் படத்தை உருவாக்குவார் என நம்பலாம்.

இது குறித்துக் கேட்டபோது, ஆங்கிலத்தில் படமெடுக்க வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. இப்போதுஅது நிறைவேறப் போகிறது. அதுவும் தமிழ் படத்தை ஆங்கிலத்தில் எடுப்பதில் மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறேன்என்றார் தாணு.

சிக்ஸ்த் சென்ஸ், அன் பிரேக்கபிள், சைன்ஸ் ஆகிய படங்களால் ஹாலிவுட்டை வர்த்தகரீதியில் கலக்கிக்கொண்டிருக்கும் தமிழரான நைட் ஷியாமளனைப் போல கெளதமும் Gurarding on மூலம் சர்வதேச அளவில்புகழ் பெறுவார் என நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil