»   »  ஓணப் போட்டியில் கலாபவன் மணி!

ஓணப் போட்டியில் கலாபவன் மணி!

Subscribe to Oneindia Tamil

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களின் வரிசையில் கலாபவன் மணி ஹீரோவாக நடித்துள்ள படமும் இணைந்துள்ளதாம்.

ஓணம் பண்டிகை வருகிற 27ம் தேதி மலையாளிகளால் கொண்டாடப்படவுள்ளது. ஆனால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். கூடவே சிறிய நடிகர்களின் படங்களும் இடையில் புகுந்து வெளியாகும் (சிவாஜி ஓடிக் கொண்டிருந்தபோது மன்சூர் அலிகான் படம் வந்தது போல!).

ஆனால் இந்த முறை ஓணத்தின்போது மம்முட்டியின் நஸ்ரனி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் இன்னும் முடியாததால் அதை ரம்ஜானுக்கு தள்ளி வைத்து விட்டனர். மேலும் மோகன்லாலின் அலி பாய் முன்கூட்டியே வெளியாகி விட்டது. சுரேஷ்கோபி படம் ஓணத்திற்கு வெளியாகிறது.

மம்முட்டி, மோகன்லால் படங்கள் ஓணத்திற்கு வெளியாகாததால் குஷியாகி விட்ட சிறு நடிகர்கள் நடித்த படங்களை ஓணத்திற்குக் கொண்டு வருகிறார்கள். அதன்படி கலாபவன் மணி நாயகனாக நடித்துள்ள இந்திரஜித் வெளியாகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி இப்படம் திரையிடப்படுகிறது.

இந்தப் படத்தைத் தயாரித்து ரொம்ப நாட்களாகிறது. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகிக் கொண்டிருந்ததால் மணி படம் தொடர்ந்து முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக மணி படத்திற்கு வழி பிறந்துள்ளது.

அங்கயும் இங்க மாதிரிதான் போல!

Please Wait while comments are loading...