»   »  கல்லூரி கிளைமாக்ஸ் மாற்றம்

கல்லூரி கிளைமாக்ஸ் மாற்றம்

Subscribe to Oneindia Tamil
Tamanna with Directors Balaji
கல்லூரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து மாற்றியுள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

இயக்குநர் ஷங்கரின் சிஷ்யரான பாலாஜி சக்திவேல் கொடுத்த முதல் படம் காதல். அந்த தாக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் கூட மீளாத நிலையில், அடுத்த படமான கல்லூரி வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கல்லூரிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், தர்மபுரியில் நடந்தது போல, மூன்று பெண்களை ஓடும் பேருந்தில் உயிருடன் கொளுத்துவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மீடியாக்கும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன. பாலாஜியும் யோசித்துப் பார்த்தார். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் அதுதொடர்பான கோர்ட் காட்சிகளும் தேவையில்லை என்று நினைத்தார் பாலாஜி.

இதையடுத்து கோர்ட் காட்சிகளை நீக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். மேலும், கிளைமாக்ஸ் காட்சியையும் கூட மாற்றியுள்ளார். புதிய மாற்றங்கள் கல்லூரிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாலாஜி.

கல்லூரியை திறந்து விட்ட கையோடு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தையும் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ்தான் தயாரிக்கவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil