»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமலுக்கு ஜோடியாக கஜோல் நடிக்கிறார்.

கமல்ஹாசனின் அடுத்த படம் மும்பை எக்ஸ்பிரஸ். தமிழ், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப் போகிறார்.இந்திப் பட வினியோகஸ்தர் பரத் ஷாவும் படத்திற்கு நிதியுதவி அளிக்கிறார்.

படத்தை படு பிரமாண்டமாக தயாரிக்கப் போகும் கமல்ஹாசன், படத்திற்கு நாயகியைத் தேடும் பணியைத் தொடங்கினார்.முதலில் மாதுரி தீட்சித்தை அணுகினார் கமல். கர்ப்பமாக இருக்கிறேன் என்று அவர் மறுத்துவிட்டார். அடுத்து தபு நடிப்பதாகஇருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் மறுத்து விட்டார்.

இதையடுத்து சமீபத்தில் மும்பையில் முகாமிட்டு நாயகி வேட்டை நடத்தினார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

இதனால் தென்னகத்திலிருந்து புதுமுக நடிகையை தேடும் பணியை தற்போது முடுக்கி விட்டார். இந் நிலையில்தான் கஜோலின்ஞாபகம் திடீரென கமலுக்கு வர, கஜோல் வீட்டிற்கு போன் போட்டார்.

மறுமுனையில் அவரது கணவர் அஜய் தேவ்கான். கமல் தனது விருப்பத்தைச் சொல்ல அஜய் சந்தோஷமாகதலையாட்டியிருக்கிறார்.

கஜோல் தமிழுக்கு ஒன்றும் புதியவரல்ல. ஏற்கனவே ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மின்சாரக்கனவு படத்தில்நடித்திருக்கிறார்.

இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர், அஜய் தேவ்கனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தைபிறந்த பிறகு, பாலிவுட்டில் செகண்ட் இன்னிங்க்ஸ் தொடங்கினார்.

கல்யாணத்திற்கு முன்பு கிளாமரில் கலக்கியவர், இப்போது டீஸண்ட்டான ரோல்களில் நடித்து வருகிறார். இந் நிலையில்தான்கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் கஜோலின் குழந்தையும் நடிக்கிறது.

படத்தின் தலைப்புக்கு ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் கூட டைட்டிலை மாற்றப்போவதில்லை என்று கமல் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தேவைப்பட்டால் ராமதாஸ், திருமாவளவனுடன் கமலே நேரில் பேசுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil