»   »  சரனுக்கு கமல் டுமீல்

சரனுக்கு கமல் டுமீல்

Subscribe to Oneindia Tamil

சரண் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்த கமல்ஹாசன் தற்போது அதிலிருந்து விலகி விட்டாராம்.

கமலும், சரணும் பாலச்சந்தரின் சிஷ்யப் பிள்ளைகள். இருவரும் இணைந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தனர்.

இந்த நிலையில் தசாவதாரத்தை முடித்து விட்டு மீண்டும் சரண் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. இதற்கான கதையைக் கூட சரண் இறுதி செய்து விட்டார். இந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனராம். படமும் டிராப் ஆகி விட்டதாம்.

இந்தப் படத்தை தனது ஜெமினி புரொடக்ஷன்ஸ் மூலமாக தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார் சரண். ஆனால் திடீரென தயாரிப்பை லண்டனைச் சேர்ந்த கருணா என்பவரிடம் கொடுத்து விட்டாராம். இது கமலுக்குத் தெரியாதாம்.

தன்னைக் கலக்காமல் சரண் எடுத்த இந்த முடிவு, கமலுக்கு கடுப்பைக் கொடுத்து விட்டதாம். சரண் படத்திலிருந்து விலக முடிவு செய்த அதை, தனது அண்ணன் சந்திரஹாசன் (நடிகை அனுவின் அப்பா) மூலமாக சரணிடம் தெரிவித்து விட்டார்.

இதுகுறித்து சந்திரஹாசன் கூறுகையில், சினிமா துறைக்கு கமல் புதுமுகம் அல்ல. தொழில் மீது அவர் வைத்துள்ள பக்தியும், ஆர்வமும், ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே.

அதேபோலவே மற்றவர்களிடமும் அந்த நேர்மையை எதிர்பார்க்கிறார் கமல். முதலில் தனது சொந்தத் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் கமலிடம் கூறியிருந்தார் சரண். அப்படித்தான் ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் கமலுக்குத் தெரியாமல் திடீரென தயாரிப்பாளரை அவர் மாற்றியது எங்களுக்கு அதிருப்தியைத் தந்து விட்டது. அதிர்ச்சியாகவும் உள்ளது. எனவே இந்தப் படத்திலிருந்து விலக கமல் முடிவு செய்தார் என்றார்.

இந்த திடீர் குழப்பம் குறித்து சரணிடம் கேட்டபோது, இந்தச் சூழ்நிலையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. நடந்தது என்ன என்பது குறித்து கமல் சாரிடம் விளக்க முயற்சித்து வருகிறேன் என்று மட்டும் கூறினார் சரண்.

கமலுக்கும், தனக்கும் நெருக்கமான சிலர் மூலம் தற்போது கமலை சமாதானப்படுத்த சரண் முயன்று வருகிறாராம்.

இப்படத்தை லண்டன் கருணாவுக்கு மாற்றி விட்டதற்காக கணிசமான தொகை ஒன்று சரணுக்கு வந்துள்ளதாம். எனவே பிரச்சினையை சமரசமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சரண்.

அடடே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil