»   »  ஆக.15ல் தசாவதாரம் ரிலீஸ்

ஆக.15ல் தசாவதாரம் ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தி வரும் தசாவதாரம் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தமிழ்த் திரை உலகிலேயே முதல் முறையாக கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் ஆசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா என பலரும் கமலுக்கு ஜோடி போட்டுள்ளனர். இதில் ஆசினுக்கும் இரண்டு வேடங்களாம்.

படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் படம் எப்போது முடிவடையும் என்பதை கணிக்க முடியவில்லையாம்.

ஜூலைக்கு முன்பாக படத்தை முடித்து விடலாம் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நம்புகிறாராம். எனவே ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று படம் திரைக்கு வரக் கூடும் என தசாவதாரம் யூனிட்டிலிருந்து செய்திகள் கசிகின்றன.

8 கமல் வேடங்களுக்கான காட்சிகளை ஏற்கனவே சுட்டு முடித்து விட்டார்கள். இன்னும் 2 கமலுக்கான காட்சிகளை படமாக்க வேண்டியதே பாக்கி. அந்த கேரக்டரில் வரும் கமல் போடும் மேக்கப் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால்தான் ஷூட்டிங் மிக மிக தாமதமாக நடந்து வருகிறதாம்.

படம் லேட்டானாலும் கூட படு மிரட்டலாக இருக்கும் என்று புன்னகை பூக்கிறது தசாவதாரம் யூனிட்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil