»   »  கெளதமி பிறந்த நாள்-கமல் பார்ட்டி!

கெளதமி பிறந்த நாள்-கமல் பார்ட்டி!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் ஹீரோயின் கெளதமியின் பிறந்த நாளையொட்டி தனக்கு நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பார்ட்டி வைத்து அசத்தலாக பிறந்த நாளைக் கொண்டாடினார் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன், கெளதமி இடையிலான நட்பு அனைவரும் அறிந்ததுதான். ஜூலை 2ம் தேதி கெளதமிக்குப் பிறந்த நாள் வந்தது. இதையொட்டி சின்னதாக ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில், நீலாங்கரையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டில் விருந்து நடந்தது. இதில் கமல், கெளதமிக்கு மிகவும் நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தசாவதாரம் படத்தின் நாயகி ஆசின், நடிகர்கள் சூர்யா, மாதவன், கார்த்தி ஆகியோர் சில முக்கிய அழைப்பாளர்கள்.

இயக்குநர் மணிரத்தினமும் வந்திருந்து கமல், கெளதமியை வாழ்த்தி விட்டுப் போனார். ஆனால் மணியின் மனைவியும், கமலின் அண்ணன் மகளுமான சுஹாசினி வரவில்லை.

மிகவும் அமைதியாக நடந்த இந்த பார்ட்டிக்கு வந்தவர்களை கமல்ஹாசனும், மகள் ஸ்ருதியும் வரவேற்றை விழாவை சிறப்பித்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil