»   »  இசைக்க வரும் ஸ்ருதி ஹாசன்!

இசைக்க வரும் ஸ்ருதி ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைஞானி கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், இசைத் துறையில் முழுமையாக ஈடுபடவுள்ளார். இந்த வருட இறுதியில் சில இசை ஆல்பங்களை அவர் வெளியிடவுள்ளார்.

ரஜினியின் மகள் செளந்தர்யா கிராபிக்ஸ் பக்கம் போய் விட்டார் என்றால், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி, இசையின் பக்கம் திசை திரும்பியுள்ளார். மகளின் இசை ஆர்வத்தைப் பார்த்த கமல், அதை தட்டிக் கொடுத்து ஆக்கப்பூர்வமாக திருப்பியுள்ளார்.

மகளுக்காக, அவரது விருப்பப்படி அருமையான ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தையும் கட்டிக் கொடுத்து வருகிறார். அதி நவீன வசதிகள் கொண்டதாக இந்த ஒலிப்பதிவுக் கூடம் அமைந்துள்ளதாம்.

ஸ்ருதிக்கும் இசைக்கும் திடீரென சம்பந்தம் வந்து விடவில்லை. இசைஞானியின் இசையில், ஹே ராம் படத்திலும், தேவர் மகன் படத்திலும் பாடியுள்ளார் ஸ்ருதி. இப்போது கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திலும் ஸ்ருதியின் இன்குரல் இடம் பெற்றுள்ளதாம்.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை என சகல இசைகளிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள ஸ்ருதிக்கு முழுமையான இசையமைப்பாளராகும் ஆர்வம் பிறந்துள்ளது.

உண்மையில், இசையை விட நடிப்புக்கே ஸ்ருதிக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். கொள்ளை அழகுடன் இருப்பதால்தான் நடிப்புக்கு சான்ஸ் வருகிறது. ஆனால் நடிப்பு வேண்டாம், இசைதான் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் ஸ்ருதி.

முழு மூச்சான இசையமைப்பாளராக மாறிக் கொண்டிருக்கும் ஸ்ருதி தமிழில் ஒரு ஆல்பத்தை ரெடி செய்து கொண்டுள்ளார். அதில் வரும் 10 பாடல்களுக்குரிய ட்யூன்களை ரெடி செய்து விட்டாராம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சில ஆல்பங்களை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஸ்ருதி. மகளின் கன்னி முயற்சியை சிறப்பான விழாவின் மூலம் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளார் தந்தை கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil