»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் அவருக்கு தந்தை வேடத்தில் நடிக்கஇயக்குநர் கே.பாலச்சந்தர் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்றபெயரில் தயாராகிறது.

முற்றிலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் படத்தில்கமல்ஹாசனும், பிரபுவும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா ஆகியோரிடையே கடும்போட்டி நிலவியது. இறுதியில் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு ஸ்னேகா அந்த வாய்ப்பைப் பறித்துக்கொண்டார். இதற்காக இரு தெலுங்கு படங்களையும் தியாகம் செய்துவிட்டார்.

படத்தின் கதை என்னவென்றால், பிரபல தாதாவான கமல் தனது அப்பாவிடம் தான் ஒரு டாக்டர் என்று பொய்சொல்கிறார். இது தெரியாத அவரது அப்பா தனது பால்ய நண்பரின் டாக்டர் மகளை கமலுக்குத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். இதை கமல் எப்படி சமாளிக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லப் போகிறார்கள்.

படத்தில் தந்தை வேடம் முக்கியமானது என்பதால், அந்த வேடத்தில் நடிக்குமாறு கே.பாலச்சந்தரை இயக்குநர்சரணும், கமலும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.ஆனால் தற்போது அவர் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த வேடத்தில் பிரபல தெலுங்குப் பட இயக்குநர் கே.விஸ்வநாத்தை (குருதிப்புனல் படத்தில்டி.ஐ.ஜியாக நடித்து தற்கொலை செய்து கொள்வாரே, அவர்தான்) நடிக்க வைக்கலாம் என்று சரணும், கமலும்முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கிடைக்கவில்லை என்றால் நாகேஷுக்கு வாய்ப்பு போகலாம்.

இதற்கிடையே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஒரு நல்ல கேரக்டர் இருக்கிறது; நடிக்க முடியுமா என்றுதனுஷிடம் கேட்டுள்ளார்கள். கமலுடன் நடிக்கக் கசக்குமா? தனுஷூம் சந்தோஷமாக சரி என்றிருக்கிறார். 15 நாள்கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். கால்ஷீட் டைரியை புரட்டிப் பார்த்தவருக்கு தலை சுற்றிவிட்டது.

அப்படி இப்படி என்று அட்ஜெஸ்ட் செய்தாலும் நான்கு நாட்களுக்கு மேல் கால்ஷீட் தர முடியாத நிலை. இதைகமலிடம் விளக்கினாராம். பரவாயில்லை என்று கமலும் தட்டிக் கொடுத்து அனுப்பினாராம்.

இது ஒருபுறமிருக்க, பாடல் பதிவு, சூட்டிங் என்று சரண், பரத்வாஜ், வைரமுத்து, கமல், பிரபு, பிரகாஷ்ராஜ், கிரேஸிமோகன் என மொத்த யூனிட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள்வசூல்பாயை மக்களிடையே களமிறக்கத் திட்டமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil