»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சமூகத்தின் கீழ் நிலையில் வசிக்கும் மீனவர்களின் குழந்தைகளுக்காக கமலஹாசன் தனது சொந்த செலவில் உருவாக்கியுள்ள நூலகம் நேற்று திறக்கப்பட்டது.

சென்னை அயோத்தி குப்பத்தில் தனது தாயாரின் பெயரில் ரூ. 1.5 லட்சம் செலவில் இந்த நூலகத்தை கமல் அமைத்துள்ளார்.

நூலகத் திறப்பு விழாவில் கமல் பேசியதாவது:

இது ஒரு விதை ஊன்றும் நிகழ்ச்சி தான். இது மரமான பின்னர் அதில் எத்தனை பேர் இளைப்பாருவார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

என் உடலை மருத்துவமனைக்கு தானம் செய்வதன் மூலம் நானும் ஒரு புத்தகமாக மாறிவிடுவதில் பெருமை கொள்கிறேன். உடலை எரிப்பது அல்லதுபுதைப்பதைவிட மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக , படிப்புக்காக ஒரு புத்தகமாக எனது உடலைப் பயன்படுவது புண்ணியம் என்று நினைக்கிறேன்.

உடல் தானம் மூலம் நான் பெரிய தியாகம் எதையும் செய்துவிடவில்லை. என்னைவிட அதிக தியாகங்களை மக்கள் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர்.ஆனால், எனக்கு முன்னால் மைக்கும், எனது தலைக்குப் பின்னால் நடிகன் என்ற ஒளிவட்டமும் இருப்பதால் நான் முன்னணியில் நிற்கிறேன் என்றார்கமல்ஹாசன்.

மீனவர்களின் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு இந்த நூலகம் பெரும் அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது சொந்த காசில் கிட்டத்தட்டரூ. 1.5 லட்சம் செலவில் இந்த நூலகத்துக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளார் கமல்.

Read more about: actor, cinema, dogs, kamalhassan, news, rajini, thatstamil
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil