»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரிக்கப்படுவதாக இருந்த கமல்ஹாசனின் அடுத்த படத்தை இந்தியிலும் தயாரிக்கதிட்டமிட்டுள்ளார்கள்.

வசூல்ராஜாவிற்கு அடுத்து கமல் யார் டைரக்ஷனில் நடிக்கப்போகிறார் என்பது பெரிய சஸ்பென்ஸாக இருந்தது.காக்க காக்க இயக்குநர் கெளதம், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா ஆகியோரது பெயர்கள் இதில் அடிபட்டன.

அஜீத் படத்தை பாலா இயக்கப்போவதாக அறிவிப்பு வந்ததையடுத்து,போட்டியிலிருந்து அவரது பெயர்நீக்கப்பட்டது. பின்பு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படம் காமெடி என்பதால் அடுத்து ஒரு சீரியஸ் படம் தான்; அதைஇயக்கப்போவது கெளதம் என்று கூறப்பட்டது.

அது இப்போது உண்மையாகிவிட்டது. கமலின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது கெளதமே தான்.கமல்ஹாசனின் ராஜ்கமல் மூவிஸ் நிறுவனமே இந்த மும்மொழிப் படத்தை தயாரிக்கிறது.

ஹே ராம் படத்திற்கு நிதியுதவி செய்த இந்தி திரைப்பட பைனான்சியர் பரத் ஷாதான் (மும்பை தாதாக்களுடனானதொடர்பால் சிறைக்குப் போய் வெளியே வந்தவர்) கமலின் அடுத்த படத்திற்கும் நிதியுதவி செய்யவுள்ளார். தமிழ்,இந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் தயாராகிறது.

படத்தில் கமலுக்கு ஜோடியாக தபுவும் இன்னொரு இந்தி நடிகையும் நடிக்கவுள்ளனர். தபு, அவ்வை சண்முகிபடத்தின் இந்தி ரீமேக்கில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அப்போதே தபுவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டுவிட்டகமல், இப்போதும் அவரையே புக் செய்யச் சொல்லிவிட்டார்.

படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்வதற்காக கமல் மும்பை சென்றுள்ளார்.அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து கலைஞர்களைத் தேர்வு செய்கிறார்.

முற்றிலும் வித்தியாசமான கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளதாம். வழக்கம்போல மிக வித்தியாசமானகெட்டப்பில் கமல் வரவுள்ளார். கமலுக்கு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதத்தில் இந்தப் படம்அமையுமாம்.

படத்தைக் கன்னடத்திலும் தயாரிப்பதால், கர்நாடகத்தில் பட ரிலீஸுக்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க கன்னடப்பிரபலம் ஒருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்க கமல் முடிவு செய்துள்ளாராம்.

இந்தப் படத்திற்கு அடுத்து சிங்கீதம் சீனிவாசராவ் படம்தான் என்று ஆழ்வார்ப்பேட்டை வட்டாரத்தில்கூறப்படுகிறது. படத்திற்கு டைட்டில் கூட ரெடியாம். குமாரசம்பவம் என்று பெயரில் வரவிருக்கும் இந்தப் படம்,வயிற்றைப் பதம் பார்க்கும் அதிரடி காமெடி படமாக இருக்குமாம்.

Read more about: cinema, kamal, nazar, tamil cinema, tamil film
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil