»   »  கமல் 58... திரை உலகின் கலைஞானி... கொண்டாடும் ரசிகர்கள் #Kamal58

கமல் 58... திரை உலகின் கலைஞானி... கொண்டாடும் ரசிகர்கள் #Kamal58

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கமல் ஹாசன் திரையுலகுக்கு வந்து ஆகஸ்‌ட் 12 ஆம் தேதியோடு 58 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.இதனை டுவிட்டரில் பதிவிட்டு பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர் கமல் ரசிகர்கள்.

#Kamal58 என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. கமல் நடித்த பல திரைப்படங்களில் இருந்து முக்கிய போஸ்டர்களைப் போட்டு டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இன்றைக்கு பிக் பாஸ் ஆக உயர்ந்துள்ளார் கமல். ரசிகர்களின் சில பதிவுகளை நீங்களும் ரசியுங்கள்

கமலின் ரசிகர்கள்

கமல் நடித்த பல புகைப்படங்களை இணைத்து போட்டு மாதா - பிதா - கமல் - தெய்வம் என்று பதிவிட்டுள்ளனர்.

கமல் மீதான காதல்

1980ஆம் ஆண்டு அழகிய இளைஞனாக ரசிகர்களை கொள்ளை கொண்டவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகின் காதல் மன்னனாக வலம் வருகிறார் கமல்.

ஒப்பிடமுடியாத நடிகர்

58 ஆண்டுக்கு முன் வந்து பல சாதனைப் படைத்தவர் கமல் அவரை கொண்டாடுவது நமது கடமை ஆனால் இப்போது இருக்கூடிய நடிகர்களுடன் ஒப்பிடுவது மடமை

கண்காணிக்கும் கமல்

கமல் எல்லோரையும் கண்காணிக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இந்த பதிவாளர்.

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் குரல் கொடுத்த இளைஞன் கமல் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

English summary
Kamal 58 Years of Cinema, fans trend in Twitter.He is Charming and charisma personified. Ruled the era with 2 national awards.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X