»   »  ஸ்ரீகாந்த் - வந்தனாவுக்கு கமல் வாழ்த்து

ஸ்ரீகாந்த் - வந்தனாவுக்கு கமல் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காக்கிநாடாவில் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு பின்னர் மறுபடியும் ஒரு கல்யாண அறிவிப்பை வெளியிட்ட, ஸ்ரீகாந்த், வந்தனா ஜோடிக்கு வந்தனாவின் அண்ணன் ரூபத்தில் சிக்கல் வந்தது.

இந்த சிக்கல், பின்னர் வந்தனா நடத்திய அதிரடி நாடகம், சட்ட போர் உள்ளிட்ட அக்கப்போர்கள் முடிவடைந்து ஒரு வழியாக வந்தனாவை தனது மனைவியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் ஸ்ரீகாந்த்.

இதையடுத்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று காலை 2வது முறையாக உற்றார், உறவினர், நண்பர்கள் முன்னிலையில் வந்தனாவை மணந்தார் ஸ்ரீகாந்த்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலையில் அடையார் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் வரவேற்பு நடந்தது. இதில் திரையுலகினர் பலரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், சிவக்குமார், கார்த்தி, ஜீவா, ரமேஷ், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சுந்தர்.சி, நடிகைகள் குஷ்பு, சோனியா அகர்வால், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா, ஆந்திர எம்.பி. சுப்பராமி ரெட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வந்து வாழ்த்தினர்.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர் பூங்கோதையுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

Read more about: marriage reception, srikanth, vandana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil