»   »  கோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்! india70

கோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்! india70

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: - சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 வருடங்களை நினைவுகூரும் வகையில் நடிகர் கமலஹாசன் இந்தியாவின் சிறந்த 70 படங்களைத் தேர்வு செய்துள்ளார். அவற்றில் 20 தமிழ்த் திரைப்படங்களும் அடக்கம். தான் பார்த்த படங்களை மட்டுமே வைத்து இந்தப் பட்டியலைத் தேர்வு செய்த்தாகவும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம் எனவும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார் கமல்.

கமல் தேர்ந்தெடுத்த தமிழ்ப் படங்கள் :

சந்திரலேகா (1948)

சந்திரலேகா (1948)

இயக்கம் : எஸ்.எஸ்.வாசன்

தயாரிப்பு : ஜெமினி எஸ்.எஸ்.வாசன்

நடிகர்கள்: எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராஜகுமாரி. டி.ஏ. மதுரம் மற்றும் பலர்.

சிறப்பு : கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ்த் திரைப்படங்களின் தாய். நல்ல படங்களின் வரிசையில் இன்றளவும் இடம்பிடிக்கும் படமாக சந்திரலேகா இருக்கிறது.

பராசக்தி (1952)

பராசக்தி (1952)

இயக்கம் : கிருஷ்ணன்- பஞ்சு

கதை : மு.கருணாநிதி

நடிகர்கள் : சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் பலர்.

சிறப்பு : பிற்காலத்தில் புகழ்பெற்ற செவாலியே சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய படம் இது. சமூகக் கோபத்தை மையமாகக் கொண்ட இந்தப்படம் காலம் கடந்தும் பேசப்படுகிறது.

அந்த நாள் (1954)

அந்த நாள் (1954)

இயக்கம் : சுந்தரம் பாலசந்தர்

தயாரிப்பு : ஏ.வி.எம்

நடிகர்கள் : சிவாஜி கணேசன், பண்டரி பாய் மற்றும் பலர்.

சிறப்பு : இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். துப்பறியும் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் அகிரா குரோசவாவின் ‘ரசோமன்' என்னும் ஜப்பானியத் திரைப்படத்தின் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.

என்னதான் முடிவு (1965)

என்னதான் முடிவு (1965)

இயக்கம் : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

தயாரிப்பு : பாலு, ரவி ப்ரொடக்‌ஷன்ஸ்

நடிகர்கள் : ஏ.வி.எம்.ராஜன், வசந்தி மற்றும் பலர்.

சிறப்பு : படம் வெளிவந்த காலத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்த்து. அந்தவகையில் இப்போதும் சிறந்த படங்களின் வரிசையில் வருகிறது.

அவள் ஒரு தொடர் கதை (1974)

அவள் ஒரு தொடர் கதை (1974)

இயக்கம் : கே.பாலச்சந்தர்

நடிகர்கள் : ஜெய்கணேஷ், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ஶ்ரீப்ரியா மற்றும் பலர்.

சிறப்பு : வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்னையை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்துகொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா நடித்திருந்தார். கமலஹாசன் மிமிக்ரி ஆர்டிஸ்டாக குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

English summary
Kamal Hassan picked kollywood classic movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil