twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக வலைத்தளங்களில் கமல் 'விஸ்வரூபம்'!

    By Mayura Akilan
    |

    விஸ்வரூபம் பட விவகாரத்தையடுத்து இணையதள உலகிலும், சமூக வலைத் தளங்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் இன்று மிக அதிகப்படியாக பேசப்பட்டுள்ளார்.

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து தமிழகம், புதுவை உள்ளிட்ட சில இடங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படம் ரிலீஸ் ஆகி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    இணையதளங்களிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் விஸ்வரூபம் பற்றியும் கமல் பற்றியும்தான் இன்று பெரும்பாலான கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

    கமல் முன்னிலை

    கமல் முன்னிலை

    இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞனான கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரத்தை பறிப்பது சரியல்ல என்கிற ரீதியில் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான குறும் பதிவுகள் இடப்படுகின்றன. இதற்கு எதிரான அவர் எப்படி ஒரு மதத்தினரை புண்படுத்தலாம் என்ற பதிவுகளும் ஏற்றப்பட்டு வருகின்றன. டிவிட்டர் டிரெண்டில் கமல்ஹாசன் தான் இன்று முன்னிலையில் உள்ளார்.

    கமல் பத்திதான் ஒரே பேச்சு

    கமல் பத்திதான் ஒரே பேச்சு

    இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிரெண்டிங்களில் பேசுபொருள் ஆகி இருக்கிறார் கமல்ஹாசன்.

    கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் குறும்பதிவுகள் #KamalHaasan #Vishwaroopam முதலான ஹேஷ்டேக்-குகளுடன் ஆயிரக்கணக்கில் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.

    கண்டன குரல்

    கண்டன குரல்

    கமல்ஹாசனின் முயற்சியைப் பாராட்டியும், கண்டித்தும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், தமிழ் திரையுலகினர் இந்த விவகாரத்தில் கமலை கைவிட்டுவிட்டதாகக் கூறி அதைக் கண்டித்தும் பலரும் பதிவிட்டுள்ளனர்.

    ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆதரவு

    ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆதரவு

    'இந்தியா ஒரு சுதந்திர நாடு. கமல்ஹாசன் தனித்துவம் வாய்ந்த திறமையாளர். அவர் தனது கருத்துகளைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு' என்று யோகா குரு தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் டிவிட்டியதை 1,000-க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    English summary
    Kamal Hassan and his Viswawroopam are the main topic in the world of Intenet as in the other world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X