twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா! #HBDKamalhaasan

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    இந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா! | Filmibeat tamil

    சென்னை : கமல் - தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்திய டெக்னீஷியன். திரை ஆளுமையாக என்றும் கொண்டாடப்படும் கமல்ஹாசன் திரைக்குப் பின்னால் செய்யாத வேலைகளே இல்லை.

    மேக்கப் மேன், டான்ஸ் மாஸ்டர் முதல் டைரக்டர் வரை பெரும்பாலான வேலைகளையும் ஒற்றை ஆளாகப் பார்த்தவர் கமல். தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக பல புதுமுயற்சிகளையும் செய்திருக்கிறார்.

    நடிப்பின் மூலம் பல வருடங்களாகச் சம்பாதித்ததை திரையுலகிலேயே பணயம் வைக்கும் நேர்மையான கலைஞன். தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய கமல் தொழில்நுட்பங்களிலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு கமல் அறிமுகப்படுத்திய டெக்னாலஜிகளில் சில இங்கே...

    ஸ்டெடி கேமரா

    ஸ்டெடி கேமரா

    தமிழ் சினிமாவுக்கு ஸ்டெடி கேமராவை அறிமுகப்படுத்தியவர் கமல்தான். முதன்முதலில் ஸ்டெடி கேமராவை `குணா' படத்தில்தான் பயன்படுத்தினார்கள்.

    ராஸ்டர் அல்காரிதம்

    ராஸ்டர் அல்காரிதம்

    `மங்கம்மா சபதம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், முதன்முறையாக ராஸ்டர் அல்காரிதம் என்கிற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

    லைவ் ரெக்கார்டிங்

    லைவ் ரெக்கார்டிங்

    கமல் இயக்கத்தில் உருவான `ஹேராம்', `விருமாண்டி' படங்களுக்குத் தனியாக டப்பிங் செய்யாமல், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே லைவ் ரெக்கார்டிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த முறையில் வெளியான முதல் படத்தின் இயக்குநர் கமல்தான்.

    குருதிப்புனல்

    குருதிப்புனல்

    இப்போது சவுண்ட் சிஸ்டத்தில் பல முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் அன்று அவற்றுக்கு முதலில் அப்டேட் ஆவது கமல்தான். `குருதிப்புனல்' படம்தான், டால்பி சவுண்ட் சிஸ்டத்தில் வெளியான முதல் தமிழ்ப்படம்.

    அனிமேஷன்

    அனிமேஷன்

    அனிமேஷன் டெக்னாலஜியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது, கமலின் 100-வது படமான `ராஜபார்வை'. இந்தப் படத்தில் தான் தமிழ் ரசிகர்கள் அனிமேஷன் காட்சியை முதன்முதலாகப் பார்த்து ரசித்தார்கள்.

    கம்ப்யூட்டர்

    கம்ப்யூட்டர்

    ஒரிஜினல் கம்ப்யூட்டரை திரையில் காட்டியது 1986-ல் வெளியான `விக்ரம்' படத்தில்தான். இதற்காகவே பிரத்யேகமாக ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்கி காட்சிப்படுத்தினார்களாம். அந்த வகையில் சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்த கணினியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது கமல். `லேப்டாப்' என்ற ஒன்றை முதன்முதலில் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் மூலம் திரையில் காட்டியதும் கமலே.

    ஆர்ட்டிஃபிஷியல் மேக்கப்

    ஆர்ட்டிஃபிஷியல் மேக்கப்

    செயற்கை ஒப்பனை எனும் ஆர்ட்டிஃபிஷியல் மேக்கப் `இந்தியன்' படம் மூலம்தான் முதல்முறையாக இந்தியாவிற்கே அறிமுகம் ஆனது. இந்தியன் தாத்தாவின் மேக்கப்பை பார்த்து ரசிகர்கள் வாயைப் பிளந்தது வரலாறு.

    ஆவிட் எடிட்டிங்

    ஆவிட் எடிட்டிங்

    தமிழ் சினிமாவில் ஆவிட் எடிட்டிங் எனும் தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்திய படம் `மகாநதி'. அதற்குப் பிறகுதான் பல சினிமாக்களில் இந்த எடிட்டிங்கை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

    ஆரோ 3D

    ஆரோ 3D

    ஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜி சிஸ்டத்தை `விஸ்வரூபம்' படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு பல படங்களின் விளம்பரத்திற்கு இந்த சிஸ்டம் பயன்பட்டது வெளிச்சம்.

    மார்ஃபிங் டெக்னாலஜி

    மார்ஃபிங் டெக்னாலஜி

    `மைக்கேல் மதன காமராஜன்' படம்தான், மார்ஃபிங் டெக்னாலஜியைப் பயன்படுத்திய முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

    மோஷன் கிராஃபிக்ஸ்

    மோஷன் கிராஃபிக்ஸ்

    ஆசியாவிலேயே முதல்முறையாக `ஆளவந்தான்' படத்தில்தான் மோஷன் கிராஃபிக்ஸ் கேமராவை சண்டைக்காட்சிக்குப் பயன்படுத்தினார்கள்.

    டிஜிட்டல் கேமரா

    டிஜிட்டல் கேமரா

    தமிழ் சினிமாவில் `மும்பை எக்ஸ்பிரஸ்' படம் மூலம்தான் டிஜிட்டல் கேமராவை முதல்முதலில் பயன்படுத்தினார்கள். அந்த வகையில் சினிமாவுக்க்கு டிஜிட்டல் கேமரா புரட்சிக்கு விதை கமல் போட்டது.

    English summary
    Kamal Haasan introduced several new technologies in Tamil cinema. Kamal has a huge role in Tamil cinema to the next stage by intoducing new technologies from steady camera to digital camera.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X