For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தனது புதுப் படத்தின் பெயரை (முன்னாள் சண்டியர்) கமல்ஹாசன் இன்றுஅறிவிக்கவில்லை. ஆனால், தனது புதிய படத்தின் கதைக் கருவில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று மட்டும்கமல் தெரிவித்தார்.

  நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 50-வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளதனது இல்லத்தில் ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாளைக் கொண்டாடினார். பலருக்கு உதவிகளை வழங்கினார்.

  மொட்டை போட்டிருந்த கமல் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், எனது அனுபவத்தில் ஒரு வயதுகூடியதாக நினைத்து சந்தோஷப்படுகிறேன். சிறு வயதில் மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவன். ஆனால்,இப்போது சொல்கிறேன் சீன மொழி உள்பட எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்.

  உலகமே கிராமமாக சுருங்கிவிட்டது. உலக உருண்டையில் நாம் ஒரு கிராமத்தில் வசிக்கிறோம். அவ்வளவே. பிறமொழி தேவையில்லை என்று சொன்னால் அது அரசியல் விளையாட்டு என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.

  பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்களின் விவரம்:

  விசிடிக்களை எதிரியாக திரைத் துறையினர் நினைக்கக்கூடாது. அது திரைப்படத்தின் ஒரு பகுதியாகவேபார்க்கப்பட வேண்டும். மக்கள் விசிடிக்களை விரும்பிப் பார்க்கிறார்கள். எனவே அதை சட்டப்பூர்வமாகமாற்றுவது குறித்து யோசிக்கலாம். அல்லது படத் தயாரிப்பாளர்களே விசிடிக்களையும் வெளியிடலாம். இதன்மூலம் திருட்டு விசிடிக்களைக் கட்டுப்படுத்தலாம்.

  கலைஞர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் எந்த அரசியல் கட்சி செயல்பட்டாலும் அது தவறானசெயல்தான். எனது புதிய படம் அத்தனை பேருக்கும் பிடிக்கும் வகையில் தயாராகி வருகிறது. சமீபத்திய சிலசெயல்கள் நல்ல கலைஞர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளன. எதிர்கால சினிமா உலகஅவமானங்களுக்கு இது சமிக்கையாக இருக்கிறது.

  எனது புதிய படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. எனக்கு வந்த கோபத்துக்கு கமல் 2004 என்று பெயர்வைக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால், கோபம் விவேகம் ஆகாது என்று விட்டுவிட்டேன். படத்துக்குபெயரை இப்போதே சொல்லியாக வேண்டுமா என்ன?. இது என்ற ஜாதியா?

  இப்போது இந்தப் படத்துக்கு சண்டியர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. ஏதோ ஒரு பெயர் தேவை. அதற்காகபுள்ளிராஜ் என்று வைக்க முடியுமா என்ன? சென்சாருக்குப் போகும்போது படத்துக்கு பெயர் வைப்பேன். புதியபெயர் வைத்தாலும் சண்டியர் பெயர் அழியாது. சென்னை என்றாலும் மெட்ராஸ்னு தானே நம்ம வாய்ல வருது.

  சண்டியர் பெயருக்கு ஜாதி இலக்கணம் தந்துவிட்டார்கள். நான் பிராமணிசத்தையே நம்பாதவன். என் சட்டையைக்கழற்றிப் பார்த்தால் மனிதம் தெரியும். அம்மை தழும்பு தவிர நான் எந்த சங்கு சக்கரமும் உடலில் சுட்டுக்கொண்டதில்லை.

  படத்தின் கதைக் கருவில் எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை. என் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்றுசொன்னால் ரிலீஸ் செய்து காட்டுவேன். கதையை மாற்றச் சொன்னால் அடுத்த வார் நடக்கும். சி.எம்.சொன்னதற்காக மக்கள் நலன் கருதி தலைமைப்பை மாற்றம் செய்ய முடிவெடுத்தேன்.

  தமிழ் சினிமாவில் எப்போதுமே புதுமுகத்துக்கு ஆதரவு உண்டு. அது 50 வயது புதுமுகமாகக் கூட இருக்கலாம்.1946க்கு முன் அரசியலுக்கு வருவது தியாகமாகக் கருதப்பட்டது. இப்போது அப்படி இல்லை. இதனால் நான்அரசியலுக்கு வரவில்லை.

  படத்தில் ஒரு காட்சிக்கு மொட்டை தேவைப்படுவதால் முடியை எடுத்தேன். பாய்ஸ் படம் வேற, என் படம் வேற.நல்ல படம் எடுத்தா ஓடும் என்ற கமலிடம், புதிய படத்துக்கு கிருஷ்ணசாமி என்றே பெயர் வைக்கத்திட்டமிட்டுள்ளீர்களாமே? என்று கேட்டபோது,

  இது குறும்பான கேள்வி என்று சொல்லி சிரித்தார் கமல்.

  பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர்கள் நெப்போலியன், மயில்சாமி, ஜெயம் பட ஹீரோ ரவி, நடிகைகள் அபிராமி,காயத்ரி ரகுராம், காந்திமதி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர், மெளலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் எதிர்பார்த்த கெளதமியும் அங்கிருந்தார்.

  50வது வயதில் அடி எடுத்து வைக்கும் கமலை நாமும் வாழ்த்துவோம் !

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X